81
டக்கேட்டதால், கெடுமதியாளர்கள் பொறாமை படமெடுத்தாடும் பாம்பாயினரோ! எங்கள் சாமி! என்று எண்ணற்ற வீரர்கள், நேருக்கு நேர் நின்று போரிடும் வீரம் காட்டிட எவர் வரினும் அவர்தம்முடன் வீரப் போரிட்டு வெற்றி கொள்ளத்தக்க அடலேறுகள், சொந்தம் கொண்டாடினர், பந்த பாசம் கொண்டிருந்தனர். பாட்டாளிகள், எங்கள் சாமி! எங்கள் சாமி! என்று பரிவுடன் அழைத்தனர். ஆலைத் தொழிலாளரும் உப்பளத் தொழிலாளரும், கல் உடைப்போரும் கட்டை வெட்டுவோரும், எங்கள் சாமி! எமக்குற்ற குறை அறிந்து உருகி, அக்குறை தீரத் துடிதுடித்தெழும் உள்ளம் படைத்த எங்கள் சாமி! என்று பாசம் காட்டினர். பள்ளிச் சிறுவர்களும், எங்கள் சாமி! என்று அன்புடன் அழைத்தனர். வணிகர் கோட்டத்திலும், நகராட்சி மன்றத்திலும் எங்கள் சாமி! என்றுதான் உவகையுடன் அழைத்தனர். எங்கள் சாமி! எதற்கும் அஞ்சா நெஞ்சினன்! எந்த இன்னலுக்கும் கலங்காத உள்ளத்தினன்! — என்று நமது கழகம் பெருமையுடன் நாடெங்கும் கூறிற்று! ஓங்கி வளர்ந்தது புகழ்! ஒப்பற்ற தொண்டு உயர்ந்தது, உயர்வளித்தது, பலன் தெரிந்தது! இது கண்டு பொறாதார், இது போன்ற ஆற்றல் பெற இயலாதார், பொறாமை கொண்டனர், பொச்சரிப்பு உமிழ்ந்தனர், நச்சரவு ஆயினர், நள்ளிரவிலே, நாட்டுக்குக் கிடைத்த நல்ல புதல்வனை, வெட்டிக்கொன்றனர்—படுகொலை புரிந்தனர்.
அடுத்து வரும் தேர்தலில் எங்கள் சாமி வெற்றிக்கொடி நாட்டப்போகிறார். K. V. K. சாமி திராவிட முன்னேற்றக் கழக நெல்லை மாவட்டச் செயலாளர்; செயற்குழு உறுப்பினர்; உப்பளத் தொழிலாளர் தலைவர்; ஆலைத் தொழிலாளர் தலைவர்; இம்மட்டோ, விரைவிலே K. V. K. சாமி M. L. A. ஆகப்போகிறார் என்று கூறிக் குதூகலித்தோமே—நமது தேர்தல் வெற்றிபற்றிய பட்டியலை எண்ணும்போதே, முதல் வெற்றி என்று இதனைக் குறித்திருந்தோம் — நமக்குச் செந்தேனாக இனித்த இதே எண்ணம், செந்தேளாயிற்றோ பொறாமை உள்ளம் கொண்டோருக்கு — ஆகா! ஓங்கி வளருகிறான், புகழ் ஓங்குகிறது, ஓங்கியபடி இருக்கிறது, எப்படி இதனைக் கண்டு சகிப்பது என்று எண்ணினரோ அந்த இதயமற்றோர் படுகொலை செய்துவிட்டனரே! பூவும் பிஞ்சும் தோன்றி கனி குலுங்கவேண்டிய பக்குவம் பெற்ற பச்சை மரத்தை வெட்டி வீழ்த்தினரே, பாரில்எங்கும் கேள்விப்படமுடியாத பாதகச் செயலன்றோ செய்தனர்.
பாவிகளா! படுபாவிகளா! சாமியை வெட்டினீர்கள், சாமியைமட்டுமா, எமது இதயங்களை எல்லாமல்லவா ஈட்டி