உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

வெள்ளைக்காரன் வெளியேறி எத்தனை ஆண்டுகளாகி விட்டன? பிரெஞ்சுக்காரன் வெளியேறி எத்தனை ஆண்டுகளாகி விட்டன? என்ன மாறுதல்களை வாழ்க்கையில் கண்டோம்.

வாழ்வு இங்கு மலர்ந்ததா என்றால், இல்லை! போதிய உணவு இந்த அரசால் இதுவரை நமக்கு அளிக்கப்படவில்லை! மக்கள் குடிப்பதற்குத் தண்ணீர் வசதியாகக் கிடைக்கவில்லை! ஆயிரக்கணக்கான நகரங்களிலும், கிராமங்கனிலும் பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் இல்லை! இன்று மக்கள் குடிதண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலையினைக் கண்கூடாகக் காண்கிறோம்! இலட்சக்கணக்கானவர்களுக்குக் குடியிருக்க வீடில்லை! மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் எனப்படுபவை, உணவு—இருப்பிடம்— தண்ணீர்! இவைகள்கூட உத்தரவாதம் செய்யப்படவில்லை இந்த அரசால்! நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது! வறுமை ஒழிந்தபாடில்லை! கல்வி எல்லோருக்கும் அளித்தபாடில்லை! இந் நிலை ஏன்?

அரசு நல்ல அரசு இல்லை; திறமையான அரசு இல்லை என்ற காரணத்தால் மட்டுமல்ல — நம்மவர் அரசாகவும் இல்லை என்பது தான் மேலே சொன்ன நலிவுகளுக்கு எல்லாம் காரணம் என்று நாம் சொல்கிறோம்.

பக்ரா—நங்கலைக் காட்டுகிறார்கள்; இராகுட் அணைத் திட்டத்தைக் காட்டுகிறார்கள்; தாமோதர் திட்டம், சிந்தரித் திட்டம் என்கிறார்கள்; பிலாய் என்கிறார்கள்! ரூர்கேலா என்கிறார்கள்; அத்தனையும் எங்கே—வடநாட்டில்!

இங்கே—சொந்த நாட்டான் பிறந்த நாட்டில் வாழ்வதற்கு வழிவகை இல்லாமல், கூலிகளாய் சிலோனுக்கும், பர்மாவிற்கும், சிங்கப்பூருக்கும், மலேயாவிற்கும், ஆப்பிரிக்கா விற்கும் சென்றவன், அங்கிருந்து தற்போது துரத்தி அடிக்கப் படுகிறான். ‘நாடற்றவன்’ என்று உதைத்துத் தள்ளப்படுகிறான். ஏனென்று கேட்க நாதியில்லை—வாவென்று சொல்ல நமக்கு உரிமை இல்லை—வந்தாலும், இன்று வசதி அளிக்கும் அதிகாரம் டில்லியில்! ஏன் இந்த நிலை?

திராவிடம் புறக்கணிக்கப்படுவதைப் புள்ளி விவரத்தோடு நாள்தோறும் நாம் எடுத்துக் கூறிவருகிறோம். ஒப்ப மறுக்கும் ஆட்சியாளர்கள், மற்றக் கட்சிக்காரர்கள் எல்லாம் சிலபல