14
சந்தர்ப்பங்களில் நாம் சொல்லியவற்றைச் சொல்லி மத்திய அரசினைக் கெஞ்சிக் கேட்கிறார்கள். நிதியமைச்சர் சுப்பிரமணியம் ஆனாலும் சரி—மைசூர் முன்னாள் முதலமைச்சர் அனுமந்தையாவானாலும் சரி—இப்போதைய ஜெட்டியானாலும் சரி—ஆந்திரத்தின் சஞ்சீவியானாலும் சரி நாம் சொல்லியவற்றைச் சிலபல சந்தர்ப்பங்களில் ஒப்புக்கொள்கிறார்கள்.
மாற்றார், உடலில் உள்ள நோயை உணருகிறார்கள். ஆனால், நாம் சொல்லும் பரிகாரத்தை உணர மறுக்கிறார்கள்— ஒப்ப மறுக்கிறார்கள்.
ஒரு நாடு விடுதலை பெற்ற நாடாக இருப்பதும், ஒரு மனிதன் சுதந்தர மனிதனாக வாழ்வதும், அதனால் ஏற்படக் கூடிய இலாப நட்டக் கணக்கல்ல —நாம் பார்க்க வேண்டியது; ‘எல்லா வசதிகளையும் கொடுத்து வாழ்நாள் முழுவதும் சிறைக் கைதியாக இருப்பாயா?’...என்று ஒருவனைக் கேட்டால், கூலிக்காரனாய் இருந்தாலும் சுதந்தர மனிதனாகவே இருக்க விரும்புவான் என்பது மறுக்க முடியாததாகும்.
அதைப்போலத்தான், ஒரு நாடும் அடிமையாக இருப்பதால் இலாபமா? சுதந்தர நாடாக இருப்பதால் இலாபமா— என்பதல்ல நாம் கவனிக்கவேண்டியது. ஒரு பெண் கற்போடு இருப்பது இலாபமா? கற்பிழந்தவளாக இருந்தால் இலாபமா?—என்று யாரும் கேட்கமாட்டார்கள். ஒரு பெண்ணின் கற்புக்கு எப்படி விலையில்லையோ அதுபோல ஒருநாட்டின் சுதந்தரத்திற்கும் விலையில்லை.
நாடு புறக்கணிக்கப்படுவது தவிர்க்கப்பட்டால்—மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே போதிய பணம் திராவிடத்திற்கு ஒதுக்கப்பட்டால், திராவிடநாடு கேட்கமாட்டீர்களா?—என்பார்கள்.
ஆகவேதான், திராவிடம் தனிநாடாக—விடுதலை பெற்ற நாடாக ஆகவேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஒரு சிலர் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள்—‘உலகத்திலுள்ள நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வாழ நினைக்கும் இந்த நேரத்தில், நாடு பிரியவேண்டும் என்கிறீர்களே; உலகப் போக்கினை உணரவில்லையே’— என்று. இன்று உலகத்திலுள்ள சின்னஞ்சிறு நாடுகளும் விடுதலைபெற்ற நாடாகத் தனிநாடாகவே திகழ விரும்புகின்றனவே தவிர, அண்டை நாட்டோடு ஒட்டிக் கொள்ள விரும்பவில்லை. ஒரு நாடும் மற்றொரு நாடும் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களும், ஐக்கியநாட்டு அமைப்புப் போன்ற-