145
கடிதம்: 148
குன்றம் பல சென்றிருந்தேன்
சிலர் பிரிந்தபின் கழகத்தின் நிலை—
காங்கிரசின் போக்கு—
தி. மு. க. தேர்தல்—
தம்பி!
சொல்லும்போதே சுவைதரும், ‘தம்பி’ என்ற இந்தச் சொல்லை ஒரு திங்களாகச் சொல்ல இயலாமற் போய் விட்டதை எண்ணி எண்ணி, இனிப்பூட்டும் அந்தச் சொல்லை, மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லிச் சுவை பெறலாமா என்று தோன்றுகிறது. ஆனால், தம்பி! தவறு என்னுடையது அல்ல. துரைத்தனத்தின் போக்கு, நம்மை ஒரு திங்கள் பிரித்துவைத்தது. ஆண்டுக்கணக்கிலே பிரித்துவைக்கத்தக்க போக்கினைத் துரைத்தனம் மேற்கொண்டிடத் திட்டமிட்டும் இருக்கிறது; அறிவாய். இந்தப் பிரிவு, கடுமையான சட்டம் காரணமாக ஏற்பட்டதல்ல; பத்திரிகைக் காகிதக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக ஏற்பட்டுவிட்டது; இதழுக்கான தாள் கிடைக்கவில்லை, உரிய நேரத்தில்; பலமுறை வேண்டுகோள் விடுத்தும்! பிறகு, நமது நண்பர் தருமலிங்கம் எம். பி அவர்கள், இதற்கென்றே. டில்லிப் பட்டணம் பறந்துசென்று முறையிட்டு, நெருக்கடி நிலைமையை