150
யிருக்கமாட்டார்கள்! கலந்து பார்த்ததில் மேலும் கொஞ்சம் சாறு வேண்டும் என்று நமக்குத் தோன்றும்; அதை அறியாது அணங்கு நம் எதிர் நின்று, வளையைச் சரிப்படுத்திக்கொண்டிருக்கக் கூடும். அல்லது வந்து நிற்கும் பிள்ளைக்கு ஊட்டி மகிழ்ந்தபடி மெய்மறந்து இருக்கக்கூடும்; துவக்கத்திலே தம்பி! கோபம்கூட நமக்கு எழக்கூடும்—துளியும் முறைவகை அறியாத மதியிலியாக உள்ளாளே என்று எண்ணத் தோன்றும்; முறைத்துப் பார்ப்போம்; அவள் சிரித்தபடி நிற்பாள்; மகவு சிந்தியதனை வழித்தெடுத்து. சுவைமிகு பண்டம் என்று இலையில் இடவும் வருவாள்; தான் சோறிட்ட முறையில் குறை வந்துளது என்பதை அறியாமலேயே. ஆத்திரமா பீறிட்டுக் கிளம்புகிறது? அவள் வீசும் பார்வை, சாறு போதுமானதாக இல்லை என்ற எண்ணத்தையே மாற்றிவிடுமே!! உணவு விடுதியிலென்றால் நிலைமை இதுவா?
“நாலு நாழியாகக் காவு காவு என்று, சாம்பார்! சாம்பார் என்று கத்துகிறேன்; மரமாக நிற்கிறாயே.”
“மரம், மாடு என்று மரியாதை இல்லாமல் பேசாதே ஐயா! உமக்குச் சேறுபோலச் சாம்பார் வேண்டும் என்று நான் கண்டேனா? சாதத்துக்குச் சாம்பார், என்று நான் எண்ணிக்கொண்டேன்; உனக்குச் சாம்பாருக்குச் சாதம் என்று முறை இருப்பது எனக்குத் தெரியுமா?”
“உளறாதே, தெரியுமா?”
“பெரிய சூரப்புலி! சும்மா இரய்யா. நான் ஒன்றும் நீ வைத்த வேலையாள் அல்ல.”இந்த, அளவோடு, நான் நிறுத்திக்கொள்கிறேன் — நிலைமை பொதுவாக இந்த அளவோடு நிற்பதில்லை.
தம்பி! நான் சுவைத்துச் சாப்பிட, வீட்டிலே மகிழ்ச்சியுடன், கனிவுடன், பெருமையுடன், காண்பர்! விடுதியில்? மருட்சி! அருவருப்பு! வெறுப்பு!! ஏன்? வீட்டில் உள்ளவர்கள், நம்மிடம் பாசம் கொண்டவர்கள்; விடுதிக்காரர் நம்மிடம் இலாபம் பெறுபவர்; இல்லம் அன்பின் இருப்பிடம்; விடுதி? இலாபம் பெறும் இடம்! வீட்டிலே கனிவும், விடுதியிலே கணக்கும் இருப்பதுதானே, எதிர்பார்க்கவேண்டிய முறை.
தம்பி! மற்ற மற்றக்கட்சி நிகழ்ச்சிகளுக்கும் நமது கழக நிகழ்ச்சிக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எனக்கு, வீட்டுச்