உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

காந்தியத்தின்மீது ஆணையிடுகிறார்கள்.

பிற்போக்குத்தனத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். மிகப்பெரும்பாலான காங்கிரஸ்காரர்.

உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசுவதல்லவா, இது; நயவஞ்சகம், வெளிவேடம், ஏய்ப்பது, என்றெல்லாம் கூறலாமல்லவா. இந்தக் கருத்தைச் சுருக்கமாக்கிக்காட்ட, நான் தம்பி, அவ்வளவையும் விட்டு விட்டு, ‘பத்தாம் பாலி’ என்று மட்டுமே குறித்துக்காட்டினேன். சொல்வதென்றால் இன்னும் நிரம்பச் சொல்லலாம்.

காந்தியத்தின்மீது ஏன் ஆணையிடுகிறார்கள்? பிறகு
ஏன் பிற்போக்குச் சக்திக்குத் துணைநிற்கிறார்கள்?

காந்தியத்துக்கு மக்களிடம் நிரம்பச் செலவாக்கு இருக்கிறது, எனவே, தாங்கள் அதன்வழி நடப்பதாக ஆணையிட்டால் மக்கள் தங்களை நம்புவார்கள். ஆதரவு தருவார்கள்! அதிலே கிடைக்கும் ஆதாயத்தைப் பெறலாம் என்ற எண்ணம். இது சுயநலமல்லவா? மக்களை நம்ப வைத்துக் கழுத்தறுப்பது அல்லவா? வெளிவேஷம் போட்டு மக்களை ஏய்ப்பதல்லவா?

நானா கூறுகிறேன்? இலட்சுமி மேனன்!

நயவஞ்சகம், வெளிவேஷம் போடுபவர், பத்தாம் பசலிக் கொள்கையுடன் குலவுபவர், ஒருவர் இருவர் அல்ல! அம்மையார் கூறுகிறார், நேரு நீங்கலாக உள்ள காங்கிரஸ்காரர்களில் மிகப்பெரும்பாலானவர்கள், இப்படிப்பட்டவர்கள் என்று.

அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிதான், நாடு ஆள நாங்களன்றி வேறு எவருளர்?? எவருக்கு உண்டு அந்தத் தகுதி என்று எக்காளமிடுகிறார்கள்; கேட்கப்போனால், சவால் விடுகிறார் சுப்பிரமணியனார்!!

மானம் போகக் காணோம் மிகப்பெரும்பாலான காங்கிரஸ்காரர்கள் நயவஞ்சகர்கள் என்ற பொருள்பட அம்மையார் பேசிடக்கேட்டு; நம்மீது பாய்கிறார்கள்!!

அம்மையார், காரணம் காட்டாமலிருந்தால், தூற்றித் திரிகிறார்கள் என்றுகூடச் சொல்லிவிடலாம். ஆனால், தக்க காரணம், விளக்கம் அளித்திருக்கிறார்கள்.