உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

கொடுக்கக்கூடியவர்களைக் காங்கிரஸ் கமிட்டிகள் ஆதரிக்கின்றன.

இது தேர்தலுக்கு ‘அபேட்சகர்களை’ப் பொறுக்கினார்களே, அதிலே வெட்டவெளிச்சமாகத் தெரிகிறதல்லவா? தொண்டர்கள், தூயவர்கள், தியாகிகள் இவர்கள் சீந்துவாரற்றுப் போய்விட்டார்கள்; பணம் பந்தியிலே என்று ஆகிவிட்டது என்று அம்மையார் வேதனைப்படுகின்றார்கள்.

முன்பெல்லாம் ஆக்க வேலைகளிலே ஈடுபடுவார்கள்; இப்போதைய காங்கிரசார் சில்லறைச் சண்டைகளிலே மூழ்கிக்கிடக்கின்றனர். நாட்டு முன்னேற்றத்துக்கான திட்டங்களில் அக்கரை காட்டுவதில்லை. காங்கிரஸ் துரைத்தனம், மக்கள் நல்வாழ்வுக்காக என்னென்ன செய்திருக்கிறது என்பதைக் கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்லும் செயலில் ஈடுபடுவதில்லை.

எப்படி ஈடுபட அவர்களுக்கு மனம் வரும்? அவர்கள் அதற்கா சேர்ந்தனர் காங்கிரசில்? காந்தியப் போர்வையில் இருந்து கொண்டு, அகப்பட்டதைச் சுருட்டத் திட்டமிடுகிறார்கள்; வெளிவேஷம்; சுயநலம்; நயவஞ்சகம்!!

இரண்டு திட்டங்கள்பற்றி, மிகுந்த சிரமப்பட்டுச் செலவிட்டு அச்சடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கச் சொல்லி அனுப்பிவைக்கப்பட்ட கட்டுக்கட்டான புத்தகங்கள், காங்கிரஸ் கமிட்டிகளில் கட்டுக்கூடப் பிரிக்கப்படாமல் கிடந்ததை என் கண்ணால் கண்டேன்.

தம்பி! இதைவிட வேதனையுடன் எவரும் பேசிட முடியாது. இப்போது எண்ணிப் பார்க்கச் சொல்லு காங்கிரசாரை, நான் குறித்துள்ள ‘அடைமொழிகள்’ பொருத்தமற்றவைகளா என்று! கோபிக்காமல்! குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்று ஆத்திரப்படாமல், யோசித்துப் பார்க்கச் சொல்லு. இந்தக் குற்றச் சாட்டுகளைக் கூறுபவர், வேறு கட்சி அல்ல; காங்கிரஸ்! ஏனோதானே! அல்ல! துணை அமைச்சர்! . மகாராஷ்டிரம் சென்றிருந்தார்களாம் அம்மையார்! அங்கு, தகுதியுள்ளவர்களைக் காங்கிரஸ் சார்பில் தேர்தலுக்கு நிறுத்தாமல், கசடர்கள், காதகர்கள், காட்டிக் கொடுப்பவர்கள், நேற்றுவரை காங்கிரசை எதிர்த்தவர்கள் ஆகியோர்