உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கடிதம்: 141

முதல் பந்தி!

விடுதலைக் குற்றம்—
நேரு பண்டிதரின் பேராற்றல்—
சொள்கையில் உறுதி—
நீண்டகாலச் சிறை—

தம்பி!

மேளதாளம் முழங்க, வாழ்த்தொலிகள் பீறிட்டுக் கிளம்ப, கோலோச்சுவோருக்குப் பாராட்டுப்பண் பாடியபடி கொடி ஏந்திகள் நடைபோட, கோலாகலமாக, ‘சுதந்திர தின’ ஊர்வலம், எங்கள் தெருவில் போய்க்கொண்டிருந்த போது, அவர்கள் நம்புவார்களோ இல்லையோ, என் வார்த்தையை—நான், பண்டித ஜவஹர்லால் நேருவின் சொற்பொழிவுகள் கொண்ட தொகுப்பு நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். ஊர்வலத்திலே கலந்துகொண்டவர்களிலே, எத்துணை பேர், அந்த நூலைப் படித்தவர்களோ, நான் அறியேன்! பலர், நாடாளும் நிலையைக் காங்கிரஸ்கட்சி பெற்ற பிறகு கதர் அணிய ஆரம்பித்தவர்கள் என்பதை நானும் அறிவேன்—ஊரறியும். எனவே, அவர்கள், பண்டிதரின் சொற்பொழிவுப் புத்தகத்தை, ஏன் தொட்டிருக்கப்