83
பாய்ந்துவரும் வெள்ளத்தில் படகேறிச் செல்வதோ? சீறிவரும் வேங்கையைக் சிறுகோலால் தாக்குவதோ? விரண்டோர் வேழம்வந்தால், தடம்படுத்துத் தடுப்பதோ? கடற்போரில் வல்லவர்கள்—தரைப்படையில் மிக்கவர்கள்—தந்திரம் அறிந்தவர்கள் — போர் யந்திரம் வைத்துள்ளவர்கள்! இவர்களை எதிர்த்து நிற்க இயலுமோ எவராலும்?—என்றெல்லாம், பரிதாபம் காட்டியும், பரிகாசம் பேசியும், பாமரர் மட்டுமல்ல, படித்தோரும், துச்சமெனக் காங்கிரசைக் கருதிய நாட்களில், அதன் சார்பில் நின்று, பண்டிதர் பேசிய பேருரைகள் கொண்ட ஏடு நான் படித்தது.
இன்று பண்டித நேருவின் ஒரு சொல், சிலரைக் கோடிக்கணக்கான பணம் பெறவைக்கும் ஆற்றல் படைத்தது. எடுத்துக்காட்டுக்கு, இனி எவரும் அரிசிச் சாதம் சாப்பிடக் கூடாது என்று அவர் கட்டளையிட்டால், கோதுமை மண்டலத்து வணிகக் கோட்டம் கோடீஸ்வரர்கள் கொலுவிருக்கும் இடமாகிவிடும்.
அன்று பண்டிதரின் பேச்சு, எத்தனையோ இளைஞர்களை இன்ப வாழ்வை இழந்துவிடச் செய்தது.
அந்த நாள் நேரு, அடிமைத்தனத்தைப் போக்கிக் கொள்ளும் ஆற்றல் பெறவேண்டும் என்பதற்காக எடுத்துக் காட்டிய காரணங்களை, அவர் வீர உணர்ச்சி பொங்கிடத் தக்க விதத்தில் விளக்கிய வகையைப் படித்துக்கொண்டிருந்த போது—காங்கிரஸ் நண்பர்கள் திடுக்கிடக் கூடாது— நாம் மேற்கொண்டுள்ள காரியத்திலே எனக்கு முன்னிலும் பன்மடங்கு ஆர்வம் வளர்ந்தது!
“எவ்வளவு பெரிய தலைவர் எமது நேரு! எத்துணை வீர உரைகள் ஆற்றியவர்! அணி வகுப்புகள் நடாத்தியவர்! ஆங்கில ஏகாதிபத்தியத்தை அதிர அடித்தவர்! சிறைக்கஞ்சாச் சிங்கம்! என்பதை அவர் பற்றிய ஏடு படித்துத் தெளிவாக அறிந்துகொண்ட பிறகுமா, உனக்கு, அவரை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தத் தோன்றுகிறது! பித்தமோ உனக்கு! உலக வல்லரசுகளிலே முன்னணி உள்ளது பிரிட்டன். அந்தப் பேரரசே, எமது நேருவின் வீரத்தின் முன்பு தலைகாட்ட முடியாமல் ஓடோடிச் சென்றுவிட்டது. பேதையே, அதை எல்லாம் படித்தேன் என்றும் பேசுகிறாய், வீரம் கொந்தளிக்கும் பேச்சு என்கிறாய்! சொல்லிவிட்டு, நீ கிளம்புகிறாய் முனைபோன கத்தியும், மூளியான கேடயமும் தூக்கிக்கொண்டு, புண்ணான