பக்கம்:தம்பியின் திறமை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

இப்படிப் பல நாட்கள் நடந்தன. ஒரு நாள், 'ஐயா, முள்ளெலியாரே, இப்படி மின்னல் வேகத்திலே போகிறீரே. உங்கள் உடம்பு கெட்டுப்போகாதா? காடுமேடுகளெல்லாம் உங்கள் வேகத்திலே அதிர்ந்து நடுங்குகின்றன” என்று சொல்லிவிட்டு முயல் கள்ளச் சிரிப்புச் சிரித்தது. முள்ளெலி அந்தச் சிரிப்பைக் கவனித்துவிட்டது.

அன்று அதற்கு எப்பொழுதும் போலப் பணிவாகப் பதில் சொல்ல மனம் இடங்கொடுக்கவில்லை. அதன் மனத்தில் மிகப் பெரிய வருத்தம் தோன்றிற்று. "ஐயா, முயலாரே உங்களுக்குக் கால் நீண்டிருந்தாலும் ஒட்டப் பந்தயம் வைத்தால் என்னை உங்களால் தோற்கடிக்க முடியாது. நான்தான் நிச்சயமாக வெற்றியடைவேன். இதை நினைவில் வைத்துக்கொள்ளும்" என்று அமைதியாகச் சொல்லிற்று.

இதைக் கேட்டதும் முயலுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. முதலில் அது தன் காதுகளையே நம்பவில்லை. இந்த முள்ளெலிக்குப் பயித்தியம்தான் பிடித்திருக்கிறது என்று பிறகு எண்ணிக்கொண்டது.

"என்ளுேடு ஒட்டப்பந்தயத்திற்கு வருகிறீரா? உம்மால் அது முடியுமா?" என்று முயல் அசட்டையோடு கேட்டது.

"நான் வர எப்பொழுதும் தயார். ஆனால் உமக்குத் தோல்வி நிச்சயம். இதை எண்ணிப் பார்த்துப் பேசுங்கள்”