பக்கம்:தம்பியின் திறமை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

செல்லமுத்துதான் லோகநாதனென்று அனைவரும் நம்பி விட்டார்கள். அதனுல் அவனை நாகபுரிக்கு அரசனுகச் செய் தார்கள். பக்காத்திருடனையும் உண்மையான லோகநாதனையும் பாதாளச் சிறையில் அடைத்தார்கள்.

அரசனுகிவிட்டால் மிகுந்த சந்தோஷம் உண்டாகுமென்று செல்லமுத்து நினைத்தான். ஆனல் அரசனைதிலிருந்து அவனுக்குக் கவலை யாரம்பித்துவிட்டது. தன் தகப்பன் யாரையும் நம்பவேண்டாம் என்று சொல்லிக் கொடுத்திருக்கிரு. னல்லவா? அதல்ை அவளுல் யாரையும் நம்பமுடியவில்லை. மேலும் ஒவ்வொருவனும் தன்னைப் போல் பொய்யே பேசுவ: தாக அவனுக்குப் பட்டது.

மந்திரிகளும் பிரதானிகளும் அரசனிடத்திலே மிகுந்த விசு வாசம் உடையவர்களென்று எல்லோரும் சொன்னர்கள். ஆனல் செல்லமுத்துவால் அதை நம்ப முடியவில்லை. பொக்கிஷ. சாலையில் இருக்கும் பணத்தையெல்லாம் முதல் மந்திரியோ மற்ற மந்திரிகளோ அபகரித்துக் கொள்ளுவார்களென்று அவனுக்கு பயம் உண்டாயிற்று. அதனல் பொக்கிஷசாலையின் சாவிகளை யெல்லாம் அவனே வைத்துக்கொண்டு இரவிலே அதற்கு வெளியிலிருந்து தூங்காமல் காவல் காத்து வந்தான். அதனுல் தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டான்.

பகலிலே எந்தக் காரியத்தைப் பற்றி யார் சொன்னலும் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. 'பொய்யா பேசுகிருய்?" என்று எல்லோரிடமும் சீறி விழுந்தான். அவன் இவ்வாறு நடந்துகொள்வதைக் கண்டு எல்லோரும் திகைப்படைந்தார்கள். செல்லமுத்துவுக்குப் பகலிலும் சந்தோஷ மேற்படவில்லை. இரவிலே தூங்குவதற்கே முடியாமல் காவல் வேல்ை செய்ய வேண்டியதாயிற்று.

இப்படியிருக்கும்போது சந்திரபுரி அரசன் தன் மகளைச் செல்லமுத்துவுக்குக் கலியாணம் செய்து கொடுப்பதற்காக அதைப் பற்றிப் பேசுவதற்கு தன் மந்திரியையும் வேறு முக்கிய மான சிலரையும் நாகபுரிக்கு அனுப்பினன்.

அவர்கள் தாங்கள் வந்த நோக்கத்தைப் பற்றி எடுத்துச் சொன்னர்கள். செல்லமுத்துவுக்கு உடனே சந்திரபுரி அரசன்