பக்கம்:தம்பியின் திறமை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தப் பு:யும் , ജ്യം' ഗു

ஒர் ஊரிலே இரண்டு கிழவிகள் இருந்தார்கள். இரண்டு பேருக்கும் ரொம்ப வயதாகிவிட்டது. அவர்களுக்கு எத்தனை வயதென்று கூட யாருக்கும் தெரியாது. அவர்கள் குடியிருந்த வீடுகள் அந்த ஊரின் ஒரு கோடியிலே எதிர் எதிராக இருந்தன. இரண்டு வீடுகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனல் அந்தக் கிழவிகள் அப்படி ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவர்கள் உருவம் ஒரே மாதிரிதான் இருந்தது; ஆனல் குணம் வேறு வேருக இருந்தது. - ஒரு கிழவி எல்லோரிடத்திலும் அன்போடிருப்பாள். யார் எதைக் கேட்டாலும், "இந்தா, எடுத்துக்கொள்' என்று சிரித்த முகத்தோடு கொடுப்பாள். அதனுல் குழந்தைகள் அவளை 'இந்தாப்பாட்டி' என்று கூப்பிடுவார்கள்.

எதிர் வீட்டிலிருக்கும் மற்ருெரு கிழவி பொல்லாதவள். யாருக்கும் எதுவும் கொடுக்கமாட்டாள். ஏதாவது வேண்டு மென்று யாராவது அவளிடம் போனுல் அவள் உடனே, 'இல்லை என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு சொல்லுவாள். அதனுல் குழந்தைகள் அவளுக்கு இல்லைப்பாட்டி என்று பெயர் வைத்தார்கள்.

ஒரு நாள் ஒரு சிட்டுக்குருவி இந்தாப்பாட்டியின் வாசலிலே உட்கார்ந்து இரை தேடிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட சிறுவன் ஒருவன் விளையாட்டாக அதன்மேலே கல்லே விசினன். அந்தக் கல் குருவியின் முதுகிலே பலமாகப்பட்டது. அதனல் பெரிய காயம் ஏற்பட்டு அதிலிருந்து இரத்தம் வழிய ஆரம்பித் தது. சிட்டுக்குருவி பறந்தோட முடியாமல் அப்படியே சாய்ந்து