பக்கம்:தம்பியின் திறமை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


சுரை முளைத்துப் படர்ந்து காய்த்தது. பெரிய பெரிய காய்கள் கிடைத்தன. ஒன்றை மட்டும் விதைக்காக விட்டு விட்டு மற்றவற்றைக் கிழவி பறித்துக் கொண்டாள். பக்கத்து வீட்டுக்கெல்லாம் கொடுத்தாள்.

இல்லைப்பாட்டி இப்படித் தானம் கொடுக்கிறதைக் கண்டு எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்ருல் அவள் யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டாள் என்பது எல்லோருக் கும் தெரிந்த விஷயம். ஆனல் அவள் கொடுத்த சுரக்காயைச் சமைத்து வாயில் போட்டதும் எல்லோருக்கும் கோபம் பொங் கிற்று. சுரைக்காய் ஒரே கசப்பு. அவர்கள் கிழவியிடம் ஓடி வந்தார்கள். பேய்ச் சுரைக்காயைக் கொடுத்து எங்களை ஏமாற்றியைா ?" என்று அவர்கள் அவளை நன்ருகத் திட்டினர்கள்.

இல்லைப்பாட்டியும் ஒரு சுரைக்காயைச் சமைத்துக் கை நிறைய எடுத்து வாயில் போட்டதும் முகத்தைச் சுளித்தாள். அவளுக்கு என்னவோ மாதிரி இருந்தது. தலை சுற்றிற்று. கடைசியில் படுக்கையிலே படுத்துவிட்டாள். வயிற்றிலே அவளுக்கு வலியேற்பட்டது.

பல நாட்களுக்குப் பிறகுதான் அவளுக்கு ஒருவாறு குணம் ஏற்பட்டது. அவள் எழுந்து சென்று காய்ந்து தொங்கிக் கொண்டிருந்த விதைச் சுரைக்காயை அறுத்து வந்தாள். அது கனமாக இருந்தது. ஆவலோடு அதன் மேல் பாகத்தை வட்டமாக அறுத்து எடுத்தாள். சுரைக்காய்க்குள் அரிசியிருக்கு மென்று கையைவிட்டாள். வெடுக்கு வெடுக்கென்று உள்ளே யிருந்த தேள்களும் நட்டுவாக்களிகளும் அவள் கையில் கொட்டின. "ஐயோ ஐயோ' என்று கூவிக்கொண்டே இல்லை பாட்டி தரையில் சாய்ந்தாள்.

அவள் வீடு முழுவதும் தேள்களும் விஷப்பூச்சிகளும் அங் குமிங்கும் ஓடின. பக்கத்து வீட்டுக்காரர்கள் இல்லைப்பாட்டி யின் கூக்குரலைக் கேட்டு மெதுவாக வந்து பார்த்தார்கள். கிழவியின் பரிதாப நிலையைக் கண்டு அவர்கள் மனம் இள கிற்று. கசப்புச் சுரைக்காயை அவள் கொடுத்ததை மறந்து விட்டு அவர்கள் அவளுக்கு உதவி செய்ய முன்வந்தார்கள்.