பக்கம்:தம்பியின் திறமை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ശ്ലേ തെീഴ്ക് (/ങ്ങൾ

ஒர் ஊரில் இரண்டு சோம்பேறிகள் இருந்தார்கள். அவர்கள் ஒரு வேலையும் செய்யமாட்டார்கள். எல்லோரையும் ஏமாற்றியே பிழைப்பு நடத்தவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சோம்பேறிகளில் ஒருவன் எத்தன். மற்ருெருவன் தசுக்கன். இப்படிப் பெயர் வைத்து அவர்களை எல்லோரும் கூப்பிடுவார்கள்.

அந்த ஊரில் புதன்கிழமைதோறும் சந்தை கூடும். எல்லோரும் தங்கள் நிலத்திலே விளைந்த பொருள்களைச் சந்தையில் கொண்டுபோய் விற்பார்கள். விற்றுக் கிடைத்த பணத்தைக் கொண்டு தங்கள் வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொள்வார்கள்.

ஒரு புதன்கிழமையன்று வழக்கம்போல் சந்தை கூடியது. எத்தன் ஒரு கோணிப்பையில் நிறைய வரண்ட சருகுகளைப் போட்டுக்கொண்டான். மேலே மட்டும் கொஞ்சம் வேர்க் கடலையைப் பரப்பி வைத்தான். அந்த மூட்டையைத் தூக்கிக் கொண்டு அவன் சந்தைக்குச் சென்று, "வேர்க்கடலை, வேர்க் கடலை" என்று கூவிக்கொண்டிருந்தான். அதே சந்தைக்குத் தசுக்கனும் ஒரு கோணிப்பையைத் தூக்கிக் கொண்டு வந்தான். அதில் அவன் நிறையச் சருகுகளையும், குச்சிகளையும் போட்டு அவற்றிற்கு மேலே சில உருளைக்கிழங்குகளைப் பரப்பியிருந் தான். உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு' என்று அவன் கூவிக் கொண்டிருந்தான். ஆனால் அவர்கள் இரண்டு பேர் களிடத்திலும் வியாபாரம் செய்ய யாரும் வரவில்லை. வெகு நேரம் சுற்றித்திரிந்த பிறகு எத்தனும், தசுக்கனும் சந்தையில் தற்செயலாகத் சந்தித்தார்கள். தசுக்கா, உன் பையில் என்ன