பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(1) 55 அகத்தடிமை செய்யும் அந்தணன்தான் அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான் மிகத் தளர் வெய்திக் குடத்தைதும் முடிமேல் விழுந்திட்டு நடுங்குதலும் வகுத்தவனுக்கு நித்தற் படியும் வருமென்றொரு காசினை நின்றநன்றிப் புகழ்த்துணை கைபுகச் செய்துகந்தீர் பொழிலார்திருப் புத்துர் புனிதனிரே. (6) என்பது பதிகத்தின் ஆறாவது பாடல். இதில் புகழ்த்துணை யார்பற்றிக் குறிப்பு உள்ளது. புத்துTரிலிருந்து நம்பியாரூரர் திருவாவடுதுறையை" வந்து அடைகின்றனார் (இது முதல்முறை வருகை). ஆடு துறைப் பெருமான் மீது 'மறையவனேர்'(165) என்று செந்தமிழ்ப் பதிகம் பாடி ஏத்துகின்றார். இப்பதிகத்தில், 18, குடம் நழுவிச் சிவலிங்கத் திருமேனிமேல் விழுந்தது. இந்த அபராதத்திற்கு அஞ்சிய நாயனாருக்கு இறைவன் அபயம் அளித்து ஒய்வு கொடுத்து அவர் உணவுக்காக நாடோறும் ஒரு பொற்காசு கொடுத்து வந்தாக (சம்பந்தர் 2.63:7), (சுந்தரர் 7.9:6) என்ற திருப்பாடல்கள் குறிப்பிடும். திருண்வடுதுறை: விழுப்புரம் - மாயூரம் - தஞ்சை இருப்பூர்திப் பாதையில் உள்ள நாரசிங்கன் பேட்டையிலிருந்து ; கல் தொலைவிலுள்ளது. திருமூலநாயனார் திருமந்திரம் அருளிச் செய்த தலம். சம்பந்தர் தமது தந்தையார் வேள்வி செய்தற் பொருட்டு இறைவனைப் பாடி 1000 பொன் பெற்று அதைக் கொடுத்ததைச் சம்பந்தர் தேவாரம் (4.56;1) கூறும், திருவிசைப்பாபாடிய திருமாளிகைத் தேவர் தொடர்பும் இத்தலத்துக்கு உண்டு. திருவா வடுதுறை ஆதீனத் தலைமைத் திருமடம் இங்கு உள்ளது.