பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - தம்பிரான் தோழர் தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சித்திரப் பந்தர் சிக்கென இயற்ற சுருண்ட கெஞ்சடை யாயது தன்னைச் சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன் புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம் போற்றி போற்றிஎன் றன்பொடு புலம்பி அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் ஆவடுதுறையாதிஎம் மானே...(2) என்பது இப்பதிகத்தின் இரண்டாவது பாடல், காவிரியின் தென்கரையிலுள்ள சில தலங்களை வழிபட்டுக் கொண்டு திருவிடைமருதூர்' வந்து அடை கின்றார் முனைப்பாடித் 5ಣ6೪ಗೆ! ஆண்டுதுறை அப்பன்மீது "கழுதை குங்குமம் (7.60) என்று தொடங்கும் செந்தமிழ்த் திருப்பதிகம் அருளிப் போற்றுகின்றார். முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய மூர்க்க னாகிக் கழிந்தன காலஞ் சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன் சிறுச்சிறி தேவிரப் பார்கட் கொன்றியேன் அந்தி வெண்பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய'அமரர்கள் தலைவா! எந்தை நீயெனக் குய்வகை அருளாய் இடைமரு துறை எந்தை பிரானே. (4) என்பது இப்பதிகத்தின் நான்காவது பாடல். 19. திருவிடைமருதூர் (திருவிடமருதூர்): மயிலாடுதுறை பதஞ்சை இருப்பூர்திப் பாதையில் உள்ளது. வரகுண பாண்டியன் பெரும்புகழ் வரலாற்றுத் தொடர்பு டையது. பட்டினத்தடிகள் வழிபட்ட தலம் அவர் அருளிய மும்மணிக் கோவிை பெற்றது. இங்குத் தைப்பூசத்தில் காவிரியில் நீராடுதல் சிறந்தது (பெ பு: ஏயர்கோன்-64 காண்க).