பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(1) 57 திருவிடைமருதூரினின்றும் புறப்பட்டுத் தொண்டர் குழாம் சூழ திருநாகேச்சரம்' என்ற தலத்திற்கு எழுந்தருள் கின்றார் நம்பியாரூரர். பிறைணிவான் நுதலாள்" (7.99) என்ற திருப்பதிகம் பாடி தேவர் பெருமான் கழல் வணங்கி உருகுஞ் சிந்தையராகின்றார். பிறையணி வாணுதலாள் உமையானவள் பேழ்கணிக்க நிறையணி நெஞ்சனுங்க நீலமால்விடம் உண்டதென்னே குறையணி கொல்லை முல்லை அளைந்துகுளிர் மாதவிமேல் சிறையணி வண்டுகள்சேர் திருநாகேச் சரத்தானே. (1) - என்பது பதிகத்தின் முதற் பாடல். திரு நாகேச்சரத்திலிருந்து சிவபுரம்,வருகின்றார். இறைவனை வழி படுகின்றார் (பதிகம் இல்லை). அடுத்து நாவலூர்ப் பெருமான் அருகிலுள்ள சிவத் தலங்களையெல்லாம் வழிபட்டுக் கொண்டு கலய நல்லுனர்” வந்தடைகின்றார். 'குரும்பை மலர்க் குழலி (7.16) என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி இத்தலத்து இறைவனைப் போற்றுகின்றார். 20 நாகேச்சரம் (திருநாகேஸ்வரம்). கும்பகோணத் திலிருந்து பேருந்து வசதி உண்டு. சேக்கிழார் அடிகள் பெரிதும் ஈடுபட்டதலம். தாம் குன்றத்துளரில் கட்டிய திருக்கோயிலுக்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டனர். சந்திரன் சூரியன் ஐந்தவை நாகம் பூசித்ததை அப்பர் பெருமான் (அப்பர் தேவாரம் 5 52;-) குறிப்பிடுவர்! d 21. சிவபுரம்: கும்கேசனத்திலிருந்து 1;கல் தொலை வில் உள்ளது. திருமால் வராக உருவில் இத்தலத்து இறைவனைப் பூசித்ததாகப் புராண வரலாறு உள்ளது . 22. கலய நல்லூர் (சாக்கோட்டை), கும்பகோணத்தி லிருந்து 2 கல் தொலைவிலுள்ளது.