பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தம்பிரான் தோழர் குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவம் கண்டு குறிப்பினொடும் சென்றவள்தன் குணத் தினைநன் கறிந்து விரும்புவரம் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியலுர் வினவில் அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட - அணிமயில்கள் நடமாடும் அணி பொழில்கு முயலின் கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக் கமலங்கள் முகமலரும் கலய நல்லூர் கானே. (1) என்பது பதிகத்தின் பாடல், பாடல்களின் இறுதிப் பகுதி யில் இயற்கை வருணனை அடங்கியுள்ளது. இப்பதிகம் பல புராணக் கதைகளையும் கொண்டது. இதனைச் சேக்கிழார் பெருமான், மெய்மைப் புராணம் பலவுமிகச் சிறப்பித் திசையின் விளம்பினார்." என்று குறிப்பிடுவர். . கலயநல்லூரிலிருந்து குடமூக்கிற்குத்* தம் தொண்டர் களுடன் எழுந்தருள் கின்றார். கும்பேசுரரை வணங்கிப் 23. பெ பு ஏயர்கோன்-67. 24. குடமூக்கு-கும்பகோணம் (கும்பேசுவரர் கோயில்): 12 ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் என்ற பெருவிழாவில் (மாமாங்கம் என்பது உலக வழக்கு), கும்பசுவரர் வெள்ளி இடப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளிவந்து மகாமகக் குளக்கரையில் தீர்த்தம் கொடுப்பர். அப்போது பல இலட்சக்கணக்கான மக்கள் களத்துள் முழுவதும் நின்று தீர்த்தமாடித் தரிசனம் செய்வார்கள், பழைய நீர் அகற்றப்பட்டு, ஆற்று மணல் பரப்பி, முழங்கால் அளவுக்கு புதியநீர் வி.ப்பெறும்; இக் குளத்துநீரில் மூழ்குவதால்இந்தியாவிலுள்ள கங்கை, யமுனை, கோதாவிரி, கிருஷ்ணை, பெண்ணை, தண் பொருநை, குமரி முதலிய எல்லாத் தீர்த்தங்களிலும் முழுகும் பலன் கிடைக்கும் என்பது புராணவரலாறு.