பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்- (1) 65 நாட்டை அடைகின்றார். இங்குள்ள சில திருப்பதிகளை' வணங்கி மீண்டும் சோழநாடு திரும்புகின்றார். முதலில் திருச்சியருகேயுள்ள கற்குடி' என்ற திருத் தலத்தை அடைகின்றார். 'விடையாருங் 35.5 to urtin’” (1.27) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ்ப் பதிகம் பாடிக் கற்குடியில் எழுந்தருளியிருக்கும் இறைவனை இறைஞ்சு கின்றார். - விடையாருங் கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய் படையார் வெண் மழுவா பரமாய பரம்பரனே கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே. (1) என்பது பதிகத்தின் முதற் பாடல். கொண்டு பூசித்த தலம். காலையில் கடம்பத்துறை (கடம்பர் கோயில் - குழித் தலையின் மேற்கே i கல் தொலைவு) கட்டுச்சியில் வாட்போக்கி (இரத்நகிரி - குழித்தல்ையிலிருந்துS. கல் தொலைவு) மாலையில் இத்தலம் ஆகிய மூன்றையும் கார்த்திகை சோம வாரங்களில் சேவிப்பது இந்நாட்டு மக்களுடைய புண்ணியச் செயல். 37. கொங்கு நாட்டுத் திருத்தலப் பயணம் - என்ற தலைச்பில் விவரிக்கப் பெற்றுள்ளன் (13 வது ಕ್ಹ) “. . .كمي 38. கற்குடி (உய்யக் கொண்டான் மலை; இது :விழுப்புரம் - விருத்தாசலம் - திருச்சி இருப்பூர்தி 'விழியில் உள்ள திருச்சி டவுன் நிலையத்திலிருந்து 2 கல் தொலைவில் உள்ளது. சிறியமலைமேல் கோயில் உள்ளது. 5-ع