பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் (1) 67 கொண்டுக் கடம்பூசை* அடைகின்றார். அவ்வூர் இறை வனை வழிபட்டுத் (பதிகம் இல்லை) திருத்தில்லையை அடை கின்றார். மடித்தாடும் அடிமைக் கண் அன்றியே’’ (7,90) என்று திருப்பதிகம் பாடித் தில்லைச் சிற்றம்பலவரை வழுத்து கின்றார். மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மன்னே நீ வாழு நாளும் தடுத்தாட்டித் தருமனார்.தமர் செக்கி லிடும்போது தடுதாட் கொள்வான் கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரியகலும் கரிய பாம்பும் பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். இப்பதிகத் திருக்கடைக் காப்பில் மீகொங்கில் அணிகாஞ்சிவாய்ப் பெரூர்ப் பெரு மானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே என்று தாம் தில்லையம்பலவன் திருக்கூத்தினைப் பேரூரில் கண்டு மகிழ்ந்த நிகழ்ச்சியைச் சிறப்பித்துப் போற்றுவதைக் கண்டு மகிழலாம். சிற்றம்பலவனிடம் விடை பெற்றுக்கொண்டு கருப் பறியலூர்" என்ற திருத்தலத்தை அடைகின்றார். இங்கு 43. கடம்பூர் : சிதம்பரத்திலிருந்து 15 கல் தொலைவு; காட்டுமன்னார் குடியிலிருந்து 3 கல் தொலைவு. ஆலயம் கரக்கோயில், இரதம், சக்கரம், குதிரை அமைந்துள்ள சிற்பமுறையில் கருவறை அமைந் துள்ளது. - 44. கருப்பறியலூர் (தலைஞாயிறு:இத்தலம் எழுப்பூர்: - விழுப்புரம்-மயிலாடுதுறை இருப்பூர்திப் பாதையில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5 கல் தொலைவிலுள்ளது. கோயிற் பெயர் "கொகுடிக் கோயில்' (பெ. பு. ஏயர்கோன் - 117).