பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தம்பிரான் தோழர் எழுந்தருளியுள்ள இறைவன்மீது "சிம்மாந்து (7.30) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பதிகம் பாடிப் போற்று கின்றார். சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணம் கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக் சண்டானைக் கருப்ப றியலுார்க் கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடும் கொகுடிக் கோயில் எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. (1) என்பது அப்பதிகத்தின் முதல் பாடலாகும். "கொகுடிக் கோயில் இறைவனை மனத்தினால் நினைந்த ப்ோது அவர் தமக்கு இனியர் என்ற தொடர் பாசுரந்தோறும் அமைந்து தேனாக இனிக்கின்றது. அடுத்து மண்ணிப்படிக்கரை" என்ற தலத்து எம் பெருமான்மீது 'முன்னிய எங்கள் (7.22) என்று தொடங்கும் செந்தமிழ்ப் பதிகம் பாடிப் போற்றுகின்றார். ஆடுமின் அன்புடையீர் அடிக்காட்பட்ட சூளி கொண்டு குடுமின் தொண்டருள்ளீர் உமரோடெமர் சூழ வந்து வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்தாமல் திருந்தச் சென்று பாடுமின் பத்தருள்ளீர் பழமண்ணிப் படிக்க ரையே. (3) என்பது இப்பதிகத்தின் மூன்றாவது பாடல். 45. மண்ணிப்புக்க ைஇலுப்பப் பட்டு வைத் தீஸ்வரன் கோயிலிருந்து 9 கல் தொலைவிலுள்ளது.