பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம், தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் முப்பத்து இரண்டு. இவற்றுள் சுந்தரரால் சேவிக்கப்பெற்றவை பதிநான்கு இந்த நாட்டுத் தலவழிபாடு இரண்டு நிலைகளில் நடைபெறுவ தாகக் கருதலாம். முதல்நிலை வழிபாடு சங்கிலியர்ரை மணப்பதற்கு முன்னரும் இரண்டாம் நிலை வழிபாடு அவரை மணந்த பின்னரும் நடைபெறுகின்றன. முதல்நிலை: தாம் பிறந்த ஊராகிய திருநாவலுரரினின்று புறப்படுகின்றார் நம்பியாரூரர். முதலில் திருக்கழுக்குன்றம்' சென்று சேர்ந்து அங்குள்ள பெருமான் மீது "கொன்று செய்த (7.81) என்ற செந்தமிழ்ப் பதிகம் பாடுகின்றார், இதில் ஒரு திருப்பாடல்: நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் ஆளும் நம்ம வினைகளால் அல்கி யழிந்திடத் தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான், காள கண்டன் உறையும் தண்கழுக் குன்றமே. (3) i. இக்கழுக்குன்றம்: இத்தலம் செங்கல்பட்டிலிருந்து ஒன்பது கல் தொலைவு (பேருந்து வழி, வடநாட்டார் இத்தலத்தைப் பட்சிதீர்த்தம என்பர், -