பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 73 என்பது. அடுத்து வழிபாட்டுக்காக திருக்கச்சூர் ஆலக் கோயிலை அடைகின்றார். கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பணிந்து போற்றிக் கோயிலின் மதிற்புறத்தே சென்று ஒரிடத்தில் அமர்கின்றார். அப்பொழுது கோடைக் காலம். வெயில்வெம்மை மிக்க நண்பகற் பொழுதாகியும் அவருக்கு அமுது சமைத்தளிக்கும் பரிசனங்கள் அங்கு வந்து சேரவில்லை! அடியார் பசித்திருக்கப் பொறாத சிவபெருமான் வேதியர் வடிவுடன் அவண் போந்து வன்றொண்டரை நோக்கி, "ஐயன்மீர், நீவிர் பசியால் வாடியுள்ளீர். யான் சிறிது நேரத்திற்குள் இங்குள்ள வீடுகளில் இரந்து உணவு கொண்டு வருமளவும் இவ்விடத்திலேயே இருப்பீராக’ என்று சொல்விச் செல்லுகின்றார். அங்ஙனமே பிச்சாண்டி அண்மை யிலுள்ள வீடுகளில் திருவமுதும் கறியும் இரந்து பெற்று நாவ லூரரை அணுகி, இதனை உண்டு பசிதீரும்’ எனக் கொடுத் தருளுகின்றார். மறையவரின் பேரன்பைக் கண்ட தம்பிரான் தோழர், அவர் இரந்து பெற்ற உணவினை விருப்புடன் வாங்கி ஆர்வத்துடன் அடியார்களுடன் அமுது செய்கின்றார். இந் நிலையில் வேதியர் மறைந்து விடுகின்றார். அது கண்ட நம்பி யாரூரர் தமது பசி தீர்த்தருளியவர் பசுபதியே என உணர் கின்றார். 'வெம்மை மிக்க நண்பகலில் திருவடி வருந்த வீடுதோறும் சென்றிரந்து எமக்குச் சோறளித்த இப்பெரு மானின் பெருங்கருணைத் திறத்தை என்னென்பேன்?' என்று நெஞ்சம் நெக்குருகி மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணிர் அரும்ப மலைமேல் மருந்தாகிய ஆலக்கோயில் பெருமான்மீது 'முதுவாய் ஓரி' (7.41) என்று தொடங்கும் செந்தமிழ்ப் பதிகம் பாடிப் பணிகின்றார்.

  • 烹,。 * fa 2 திருக்கச்சூர் இதுசென்னை - செங்கற்பட்டு இருப் பூர்தி வழியிலுளள சிங்கப்பெருமாள் கோயில் என்ற ஊரிலிருந்து ஒன்றரைக் க்ல் தொலைவில் உள்ளது.