பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தம்பிரான் தோழர் முதுவா யோரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே மதுவார் கொன்றைப் புதுவீ குடும் மலையான் மகள் தன் மணவாளா கதுவாய் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே அதுவே யாமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே...(1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். திருக்கச்சூரிலிருந்து புறப்பட்டுக் காஞ்சி நகரை அணுகு கின்றார் நம்பியாரூரர். நகரப் பெருமக்கள் அன்பினால் எதிர்கொண்டு மாபெரும் வரவேற்பு நல்குகின்றனர்; போற்றி மகிழ்கின்றனர். இந்த வரவேற்பைச் சேக்கிழார் பெருமான், மல்கு மகிழ்ச்சி மிகப்பெருக மருகும் அணித்தோ ரனம்நாட்டி அல்கு தீபம் நிறைகுடங்கள் அகிலின் தூபம் கொடியெடுத்துச் செல்வ மனைகள் அலங்கரித்துத் ~ தெற்றி ஆடல் முழவதிரப் பல்கு தொண்ட ருடன்கூடிப் . பதியின் புறம்போய் எதிர்கொண்டார்." என்று பாடுவர். தகரினுள் நுழைந்தவுடன் திருவேகம்பத்தை (ஏகாம்பர நாதர் கோயில்) அடைகின்றார். மலை மகளாரது பூசனையை ஏற்றருளிய ஏகாம்பர நாதரைக் கண்டு நிலமிசை நீடு வீழ்ந்து இறைஞ்சுகின்றார். ஆராத காதலுடன் செந் தமிழ்ப் பதிகம் ப்ரிடித் துதிக்கின்றார். தொண்டர்களுடன் சிலநாள் இந்நகரத்தில் தங்கியிருக்கின்றார். 3. பெ.பு. ஏயர்கோன். 185