பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 75 காஞ்சியில் தங்கியிருந்த நாட்களில் காமக்கண்ணியார் எழுந்தருளியிருக்கும் காமக் கோட்டத்திற்குச் சென்று பணி கின்றார். திருமேற்றளித் திருக்கோயிலை அடைந்து தோத்தா வெண்சுடரே (7.21) என்று தொடங்கும் திருப் பதிகம் பாடித் துதிக்கின்றார். நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே தலைவா நின்னினையப் பணித்தாய் சலமொழிந்தேன் சிலையார் மாமதில்சூழ் திருமேற் றளியுறையும் மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.19) என்பது இப்பதிகத்தின் ஒன்பதாவது பாடல், அடுத்து, திருவோனகாந்தன் தளியை" இறைஞ்சி, நெய்யும் பாலும்" (7.5) என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். - நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யலுற்றார் கையி லொன்றும் காசும் இல்லைக் கழலடி தொழுதுய்யி னல்லால் 4. கச்சித்திருஆேற்றளி (பிள்ளைபாளையம்) இக்கோயி வில் இரண்டு சிவபெருமான் சந்நிதிகள் உள்ளன். ஒன்று திருமாலுருவம். சம்பந்தர் பதிகம் ஒத உருகிச் சிவலிங்கம் ஆகிய ஓத உருகீசர் சந்நிதி மற் றொன்று திருமேற்றளிநாதர் சந்நிதி. சந்நிதித் தெருவின் கோடியில் ஆளுடைய பிள்ளையார் (சம் பந்தர்) கோயில் உள்ளது. இவர் வருகையால் இப் பகுதி பிள்ளையார் பாளையம்' எனப் பெயர் பெற்றது (சம்பந்தர் பதிகம் கிடைத்திலது). திருகோண காந்தன் தளி: இது காஞ்சியில் சர்வதிர்த் தத்திற்கு அருகில் உள்ளது. சுந்தரர் பொன் பெற்ற தலங்களுள் ஒன்று.