பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தம்பிரான் தோழர் ஐவர் கொண்டிங் காட்ட வாடி வாழ்குழிப்பட் உழுந்து வேனுக்(கு) உப்பு மாறொன் றருளிச் செய்யீர் ஒனகாந்தன் தளியு ளிரே (!). - என்பது இப்பதிகத்தின் முதல் பாடல். இத் திருப்பதிகத்தைக் கேட்ட ஒனகாந்தன்தளியில் எழுந்தருளியிருக்கும் இறைவன் தம்பியாரூாருக்குப் பொன்தந்து மகிழ்விக்கின்றார். அடுத்து, கச்சி அநேகங்காவதம்" என்னும் திருக் கோயிலுக்கு வருகின்றார். தேனெய்புரிந்துழல் (7.10) என்று தொடங்கும் செந்தமிழ்ப்பதிகம் பாடித்துதிக்கின்றார். தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு மானதிடத்தின் ழைங்கணையக் கோனை எரித்தெரி யாடியிடங்குல வான திடங்குறை யாமறையாம் மானை யிடத்ததோர் கையனிடம்மத மாறுபடப் பொழியும் மலைபோல் யானை புரித்தபிரானதிடங்கலிக் கச்சி யநேகதங் காவதமே. (1) என்பது பதிகத்தின் முதல் திருப்பாடல். அநேகங்காவதத்தை வழிபட்ட தம்பிரான் தோழர் பனங்காட்டுர்’ என்ற தலத்திற்கு வருகின்றார். 'விடையின் மேல்" (7.86) என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடித் தலத்து இறைவனைத் துதிக்கின்றார். 5. கச்சி அநேகங்காவதம் : இது காஞ்சியில் இருப்பூர்தி நிலையத்திவிருந்து 1; கல் தொலைவிலுள்ளது. புத் தேரித் தெருவிற்கு அருகிலுள்ள திருத்தலம். காஞ்சியில் உள்ள திருகோயில்களில் அம்பிகையின் மூலத்தானம் இல்லை. காமாட்சியம்மன் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. 7. பனங்காட்டூர் இது வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு என்றும் வழங்கப்பெறும். காஞ்சி யிலிருந்து 9கல்தொலைவில் உள்ளது. பேருந்துவழி.