பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 * - தம்பிரான் தோழர் வலம் வருகின்றார். மலையின் மீதேறிக் காளத்திநாதனைக் கைதொழுது இறைஞ்சி செண்டாடும் (7.26) என்னும் பதிகம் பாடி மலைமேல் மருந்தைப் போற்றுகின்றார். செண்டாடும் விடையாய் - சிவனேனன் செழுஞ்சுடரே வண்டாருங் குழலாள் உமைபாக மகிழ்ந்தவனே கண்டார் காதவிக்கும் கனநாதன் எங்காளத்தியாய் அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே (i) என்பது பதிகத்தின் முதல் பாடல், காளத்திநாதரின் அருகில் அன்புருவாய் நிற்கும் கண்ணப்பரையும் வணங்கி மகிழ்கின்றார். தொண்டர்களுடன் இத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருக்கின்றார். காளத்தி மலையிலிருந்த வண்ணமே வடநாட்டிலுள்ள திருப்பருப்பதம்,' திருக்கேதாரம் முதலிய திருத்தலங் 11. ஜீசைலம் ஆ ந் தி ரத் தி லு ள்ள து. திருப்பதி யிலிருந்து சிறப்புப் பேருந்து உண்டு. 'செல்லலுற வரிய சிவன்சீ பர்ப்பதமலை" (7.79:10) என்றபடி மிகச் சிரமமான மலை, சிவராத்திரி சமயம் போவது வசதி. பெரிய கோயில். கிருட்டிணதேவ ராயர் பலதிருப்பணிகள் செய்த தலம். மக்கள் மலையேறிச் சென்றவுடன் நீராடாமல் கருவறை யிலுள்ள சிவலிங்கத்தைத் தழுவி வழிபாடு செய் வதைத் துரளிதரிசம்’ என்பர்; சிறப்பு மிக்கது. நந்திதேவரே பரமசிவனை மலையாக இருந்து தாங்குகின்றார் என்பது புராணச் செய்தி. 12. இக்கேதாரம் (பத்ரிகேதார்) இமயமலையிலுள்ளது. கடினமான பயணம். திரு தி. சு. அவினாசிலிங்கம். தல யாத்திரை செய்து 'திருக்கேதார யாத்திசை” என்று ஒரு பயண நூல் எழுதியுள்ளார் (சுமார் 40 ஆண்டுகட்கு முன்பு). பார்வதி தேவி இத் தலத்தில்