பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 79 களையும் நினைந்து இறைஞ்சுகின்றார். பருப்பதத்தின்மீது 'மானும் வரையினமும்’ (7.79) என்று தொடங்கும் பதிகம் பாடிப் போற்றுகின்றார். மானும் வரையினமும் மயிலினமும் கலந்தெங்தும் தாமே மிகமேய்ந்து தடஞ்சுனைநீர் களைப்பருகிப் பூமா மரமுரிஞ்சிப் பொழிலு:டே சென்றுபுக்குத் தேமாம் பொழில்நீழிற் றுயில் சீடர்ப் பதமலையே.(1) என்பது முதற் பாடல் இந்தப் பாடல்களில் வரும் மலை வருணனை திருமங்கையாழ்வாரின் சிங்கவேள் குன்ற வருணனையை ஒத்துள்ளதாகக் கருதலாம். இரண்டும் வறட்சி மிக்க மலையாதலால் வருணன்ை கிட்டத்தட்ட ஒத்துள்ளது. காளத்தியிலிருந்த வண்ணம் திருக்கேதாரத்தின்மீது வாழ்வாவது (7.78) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி கேதாரநாதனைச் சேவிக்கின்றார். இதில், வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம். பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்தபறிதான் நோன்பிருந்து கேதாரீஸ்வரரை வழிபட்டு அர்த்த நாரீஸ்வரப் (அம்மை-அப்பர், தையல்-பாகர்) பேறு பெற்றனர். பிருங்கி முனிவர் தம்மை வலம் வந்து வழிபாடு செய்ய்ாமல் பிரித்துப் பரம சி வ ைன் மட்டிலும் வணங்கியதால் பிரிக்க இயலாத தையல் பாகக் கோலத்துள் இடம் பெறுவதற்கே பார்வதி தேவி நோன்பு தோற்றனர் என்பது புராண் வரலாறு. இந்நோன்பு தீபாவளியையொட்டித் தமிழ் நாட்ெங்கும் கெர்ண்டாடப் பெறுகின்றது.