பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 8} புரமங் கையர்கள் நடமாடப் பொழியும் வெள்ளப் பூமாகி அரமங் கையரும் அமரர்களும் வீச அன்பு ருடன் புகுந்தார்' " புகுந்தவர், வானை முட்டும் கோபுரத்தை வணங்குன்றார்: திருக்கோயிலை வலம்வருகின்றார். சிவபெருமான் சந்நிதியில் "ஊனும் உயிரும் கரைந்துருக உச்சிகுவித்த கையினுடன்" வீழ்ந்து வணங்குகின்றார். ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், சோழமன்னன் எல்லாத் தலங்களின் படித்தரத்தையும் குறைத்தனுப்பிய கட்டளை ஒலையில் இவ்வூர் இறைவன் ஒருவரும் அறியாதபடி "ஒற்றியூர் நீங்கலாக மற்றையூர்க்கு இக்கட்டளை' என்று எழுதிய படியால், இந்த ஊர்ப்பெருமான் எழுத்தறியும் பெருமான் எனப்படுகின்றான். இந்த எழுத்தறியும் பெருமான்மீது 'பாட்டும்பாடிப்பாவி (7.91) என்ற செந்தமிழ்ப் பதிகம் பாடிப் போற்றுகின்றார். இதன் முதற் பாடல்: பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் காட்டும் கலமும் திமிலும் கரைக்கே ஒட்டும் திரைவாய் ஒற்றி யூரே. (1) என்பது, தம்பிரான் தோழர் திருவொற்றியூரில் தங்கியிருந்த காலத்தில் எழுத்தறியும் பெருமானை நாள்தோறும்-மூன்று காலங்களிலும் ஆர்வமுடன் தொழும் வழக்கத்தை மேற் கொள்ளுகின்றார். இந்தக் காலத்தில் சங்கிலியாருடன் இறைவனருளால் திருமணம் நடைபெறுகின்றது. இஃது இத் நூலில் தனிக்கட்டுரையாக அமைகின்றது (எட்டாவது கட்டுரை). . . 14. பெ. பு: ஏயர்கோன்-200, 20 த-5