பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 盛3 வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாமுய்ய நுங்கிய முதல்வர்க் கருளி நொய்யேனைப் பொருட்படுத்துச் சங்கிலியோ டெனைப்புணர்ந்த தத்துவனைச் சழக்கனேன் எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே. (1) என்ற பாடல்கள் தம்பிரான் தோழரின் நெஞ்சுருகி வெளி வருகின்றன. - பிறிதொருநாள் திருவாரூர் நினைவு மூளப்பெறுகின்றது வன்றொண்டருக்கு உன்னுந்தோறும் உவகையளிக்கும் உள்ளத்தில் ஊறும் தேனாகிய சிவபெருமானை. ஒற்றியூர்த் திருக்கோயிலில் சென்று இறைஞ்: இனி திருவாரூரை நோக்கிப் புறப்படுகின்றார். சங்கிலியார்க்குத் தான் செய்து கொடுத்த சூளுறவிற்கு மாறாக அவரைப் பிரிந்து ஒற்றியூர் எல்லையைக் கடந்து ஒரு காலடி வைக்கும்பொழுது ஆரூரரின் இரண்டு கண்களும் ஒளியிழக்கின்றன. வழி தெரிந்து நடக்கமுடியாத நிலையில் மூர்ச்சித்து விழுகின்றார்; செய்வ தறியாது திகைப்புறுகின்றார். "மைவிரவு கண்ணார்பால் குளுறவு மறுத்ததனால் இவ்வினை வந்தெய்தியது' என உணர்ந்து தமது செயலற்ற நிலைக்கும், சொன்ன சொல் தவறினமைக்கும், தமக்குண்டான பழிக்கும் நானுகின்றார், ‘எம்பெருமானை அடைந்து இத்துயர் நீங்கப் பாடுவேன்" என்று 'அழுக்குமெய்கொடு’ (7.54) என்ற முதற்குறிப் புடைய திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன் அதுவு நான்படப் பாலதொன் றானால் பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்