பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தம்பிரான் தோழர் வழுக்கி விழினும் திருப்பெயரல்லால் மற்று நானறியேன்மறு மாற்றம் ஒழுக்க என்கனுக் கொருமருந் துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே. (1) என்ற திருப்பாடவில் தமது பிழையினைப் பொறுத்தருளும் படி ஒற்றியூர்ப் பெருமானைப் பரவிப்போற்றுதலைக் காண ጙth. . மேற்காட்டிய திருப்பதிகத்தில், மூன்று கண்ணுடை யாய் அடி யேன்கண் கொள்வதே கணக்கு வழக்காகில் ஊன்று கோலெனக் காவதொன் றருளாய்(4) கழித்தலைப் பட்ட நாயது போல ஒருவன்கோல் பற்றிக் கறகறஇழுக்கை ஒழித்துநீ அருளாயின செய்யாய் 5) அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால் ‘அழையேல்போகுரு டா எனத் தரியேன் முகத்திற் கண்ணிழந் தெங் வனம் வாழ்கேன் (9) என்றெல்லாம் தம்பிரான் தோழர் ஒற்றியூர் இறைவனை விளித்துப் பேசும் உரையாடல்கள் இரண்டு கண்களையும் இழந்துத் தாம் படும் பெருந்துயரத்தை நன்கு புலப்படுத்து வனவாக அமைகின்றன; நம் உள்ளத்தையும் உருக்கிக் கண்ணிர் பெருகச் செய்து விடுகின்றன. இங்ங்னம் கண்ணிழந்து நெஞ்சம் கலங்கி வருந்திய நிலை யிலும் ஒற்றியூர் இறைவன் அவருக்கு விரைந்த அருள் புரிந்திலன், திருவாரூர் ஈசனை வழிபட விரும்பியவர் உடன் வரும் சிவனடியார்கள் வழிகாட்டிக் கொண்டு முன்னே