பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 85 செல்ல வட திருமுல்லை வாயிலை வந்து அடைகின்றார். சொல்லரும் புகழான் தொண்டைமான் யானையை முல்லைக் கொடியால் பிணித்து நிறுத்தி அவ்வேந்தனுக்கு எல்லையி லின்பம் வழங்கியருளிய திருமுல்லைவாயில் பெருமானை இறைஞ்சுகின்றார். கண் பார் ைவ யி ன் றி த் தாம் படுத் துயரத்தை களைந்தருளுமாறு திருவும் மெய்ப்பொருளும்’ (7.69) எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்று கின்றார். இத்திருப்பதிகத்தில், 'சங்கிலியின் பொருட்டு என் கண் களைக் கவர்ந்து கொண்ட பெருமானே, கண் இழந்து நிற்கும் அடியேனது பேரிடரைக் களைந்தருள்வாயாக’ என வேண்டும் போக்கில் அமைந்த, விண்பணிந் தேத்தும் வேதியர்மாதர் வெருவிட வேழமன் றுரித்தாய் செண்பகச் சோலைசூழ் திருமுல்லை வாயிலாய்! தேவர்தம் அரசே! 15. இமுல்லை வாயில் (வட): சென்னை-அரக்கோணம் இருப்பூர்தி வழியில் அம்பத்துார் நிலையத்திலிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. தொண்டை நாட்டு மன்னன் ஒருவன் வேட்டையாடி வரும்போது அவனு பீனேே காலில் முல்லைக் கொடி சிக்கிக் கொள்ளவே, யானை நின்று விடுகின்றது. மன்னன் கீழே இறங்கி முல்லைக் கொடியை வெட்டு கின்றான்: இரத்தம் வெளிப்படுகின்றது. அகழ்ந்து பார்க்கும்போது ஒரு சிவலிங்கம் காட்சி அளிக் கின்றது; வெட்டுண்டஇடமும் .ெ த ரி கி ன் ற து , உடனே மன்னன் காட்டை அழித்துக் கோயிலமைக் கின்றான். (1.69:10) இப்போதும் கருவறை மூர்த்தி யின் தலையில் வெட்டுக்குறி தென்படுகின்றது. தலத்து இறைவன் மாசிலாமணி இவருக்கு வெந்நீரில் திருமுழுக்கு நடைபெறுகின்றது.