பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ . தம்பிரான் தோழர் தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய் சங்கிலிக்காளன் கண்கொண்ட பண்பilன் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. (3) என்ற திருப்பாடலில் திருமுல்லை வாயிலில் எழுந்தருளி யிருக்கும் மாசிலாமணியைப் பரவிப் போற்றுதல் ஈண்டு நினைத்தற்குரியது. பின்னர் திருநாவலூரர் திருவெண்பாக்கத் திருக் கோயிலை அடைகின்றார். சிவபெருமானின் பெருங் கருணைத் திறத்தைச் சிந்தித்து வணங்கி பிழையுளன பொறுத்திடுவர்" (1.89) என்ற திருப்பதிகம் பாடிப் போற்று கின்றார். இப்பெருமானை விளித்து, "பெருமானே, . ‘என்னை வலியவந்து ஆட்கொண்டருளிய இறைவன் யான் அறியாமையால் செய்த பிழைகளையும் பொறுத்தருள் புரிவான் என்ற துணிவுடன் நின்னை வந்தடைந்தேன். அடியேன் ஏதேனும் பிழை புரிந்திருந்தால் அப்பிழையை நின் திருவருளால் பொறுத்து அருள் புரிதலே முறை. இறைவனாகிய நீ அடியேன் செய்த குற்றத்தை பொறுத் தருளாமையால் நினக்கு வரும் பழியையும் எண்ணிப்பாராது என் கண்களைப் படலத்தால் மறையச் செய்தாய். நீ இந்தத் திருக்கோயிலினுள் இருக்கின்றாயா’ என்று தன் மனவருத்தம் தோன்ற வினவுகின்றார். அப்பொழுது அவர் தோழராகிய 16. வெண்பாக்கம் (திருவுள்ம்புதூர்) : .ெ ச ன் ைன - அரக்கோணம் இருப்பூர்திப் பாதையில் உள்ள இருவள்ளுரிலிருந்து 7 கல் தொலைவிலுள்ளது, சென்ன்ைக் குடிநீர் சேமிக்கப் பட்டிருக்கும் பூண்டி ###G gáságidir (Poondi Reservoir) g4 geogth திருக்கோயிலும் மூழ்கிவிட்டன. கோயிலிலிருந்த மூர்த்திகள் த்தேக்கத்தின் கரையில் ஒர் அறையில் புகலிடம் பெற்றுள்ளன. கண்ணிழந்த் தம்பிரான் தோழர் இத்தலத்தில் ஊன்றுகோல் பெற்றனர்.