பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 - தம்பிரான் தோழர் யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான்; வார்கொள் முலையாய்! நீ அவனை மணந்தால் அணைவாப் மகிழ்ந்து" எனப் பணித்தருள்கின்றார், சங்கிலியார் அடைந்த மகிழ்ச்சியை எவ்வாறு அளந்து காட்டுவது? இறைவன் திரு బుతాణిr பெற்றவரையன்றோ மணப்பது என்பது இவர்தம் சங்கற்பம்: (திருத்தொண்டர் புராணம் - ஏயர்கோன் கவிக்காம நாயனார் புராணத்தின் மூலம்தான் சங்கிலியாரின் திருமணம் பற்றிய செய்திகள் அறிய முடிகின்றது. சங்கிலியாரின் கனவில்தான் ஒற்றியூர் பிரான் தோன்றுகின்றான். ஆதலால் அவன் சங்கிலியாரிடம் உரையாடுவதெல்லாம் கனவு நிலையில் தான். ஆனால் தம்பிரான் தோழரிடம் பேசுவதெல்லாம் நனவுதி வையில் தான் என்று கொள்ள வேண்டியுள்ளது கனவு நிலை என்று குறிப்பிடப் பெறாத தால், இதனை மனத்தில் கொண்டுதான் ஒற்றியூர் இறைவன் - சங்கிலியார் உரையாடல், ஒற்றியூர் இறைவன் - தம்பிரான் தோழர் உரையாடல் நடை பெறும் நிலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்). சிவபெருமானின் அருள் மொழியைக் கேட்ட சங்கிலி யார் (கனவு நிலையில் இறைவன் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சுகின்றார். “எம்பிரானே, நும்மால் அருளிச் செய்யப்பெற்றார்க்கு அடியேன் உரியேன். தங்களது ஆணையைத் தலைமேல் கொள்ளுகின்றேன். அடியேனைத் தக்க விதிமணத்தால் தம்பியாருரருக்கு அருளும் நிலையில் மலைமகளாரைப் பிரிவின்றி ஒரு பாகத்தில் கொண்டருளிய தங்கன்பால் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டியதொன் 3.டிெ ஆெ. 239,