பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிவியார் திருமணம் 9? றுண்டு. தம்பிரான்தோழராகிய அவர் திருவாரூரில் மிக்க மகிழ்ச்சியுடன் நிலைபெறத் தங்கியிருக்கும் விருப்பமுடை யவர் என்பதனையும் தாங்கள் அறிந்தருளல் வேண்டும்" என்று பெருக நாணித் தொழுது உரைக்கின்றார். வன் றொண்டரின் இந்த நிலையை உணர்ந்து அருளிய ஒற்றியூர் இறைவன் சங்கிலியாரை நோக்கி, பொற்றொடியாய், அந்த வன்றொண்டன் நின்னைவிட்டுப் பிரியேன்” என்று உனக்குச் சூளுரை செய்து தருவான்' என்று அருளிச் செய் கின்றார். . - - பின்னர் இறைவன் தம்பிர்ான் தோழர்பால் செல்லுகின் றார்: "நாம் சங்கிலியின்பாற் சென்று அவளை மணம் புணரும் நின் விருப்பத்தைத் தெரிவித்தோம். அதற்கு நின்னால் செய்யத் தக்கதொன்று உள்ளது' என்கின்றாள். அது கேட்டு மகிழ்ச்சியடைந்த வன்றொண்டர், 'அடியேன் செய்ய வேண்டுவது யாது?’ என்று வினவுகின்றார். ஒற்றியூர்ப் பெருமானும், "நீ இன்றிரவே அவள்பாற்சென்று, நின்னை விட்டுப் பிரியேன்” என்று சூளுரைத்துத் தருதல் வேண்டும். இனி, இந்த ஏற்பாட்டில் நாம் செய்யத் தக்கது உண்டாயின் அதனையும் தெரிவிக்க' எனப் பணித்தருளு கின்றார். சங்கிலியாரின்பால் தம் மனத்தைப் பறி கொடுத்த வன்றொண்டர், "இறைவன் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் பலவற்றிற்கும் சென்று வழிபடும் விருப் புடைய அடியேனுக்கு இவ்வாறு சூளுரைத்துத் தருதல் பெருத்தடையாக முடியுமே” என்னும் தினைவுடையவராய் இறைவனைப் பணிந்து, எம்பெருமானே, அடியேன். சங்கி விக்கு நின்னைப் பிரியேன்” என்று சூளுரைத்துத் தருவதற். காக அடியேன் அவளுடன் திருக்கோயிலில் நும் திருமுன்னர் வர நேருங்கால், தேவரீர் அவ்விடத்தை விட்டு ஆல யத்திலுள்ள மகிழ மரத்தடியின்கீழ் எழுந்தருளியிருத்தல் வேண்டும்’ என்று தாழ்ந்து இரக்கின்றார். - . . . . த-7 - .