பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9& தம்பிரான் தோழர் இறைவனும் அவர்தம் வேண்டுகோளுக்கு இசைந்தருளு கின்றார். நம்பியாரூரரும், "அடியேனுக்கு அரியது இனி ஒன்றுமில்லை" என இறைவனை ஏத்தி மகிழ்கின்றார். திருக் கோயிலை விட்டு வெளிச்செல்லுகின்றார். சிவபிரானும் முன்போல் சங்கிலியாரின் கனவில் தோன்றி, நங்காய்! வன் தொண்டன் நினக்குச் சூளுரைத்துத் தருதற்கு இசைந்து விட்டான். அவன் திருக்கோயிலில் நம் திருமுன்பு சூளுரைக்க வந்தால், நீ அதற்கு உடன்படாது, மகிழ மரத்தடியில் செய்து தருமாறு வற்புறுத்துக' என்று கூறி மறைத்தருளு கின்றார். இவற்றால் ஒற்றியூர் இறைவனின் திருவுள்ளக் குறிப்பை நம்மால் அறிந்து கொள்ள இயவில்லை. இந் நிலையில் சங்கிலியார் உறக்கத்தினின்றும் விழித் தெழுந்து இறைவனின் திருவுள்ளக் குறிப்பினை அறிய முடி யாமல் வியப்புறுகின்றார். தம்முடைய சேடியர்களைத் துயி லெழச் செய்து தமக்குச் சிவபெருமான் கனவில் தோன்றி அருள்செய்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவர்கட்கு எடுத்துரைக்கின்றார். இவற்றைக் கேட்ட பாங்கியர் அச்சம், அதிசயம், பெருமகிழ்ச்சி இவை கலந்த உணர்ச்சியுடையவர் கனாகிச் சங்கிவியாரை வணங்கி மகிழ்கின்றனர். இந்நிலை பில் இறைவனுக்குத் திருப்பள்ளியெழுச்சியில் திருமாலை தொடுத்தற்குரிய வைகறைப் பொழுதும் வத்தெய்துகின்றது. சங்கிவியார் தம் தோழிமார்களுடன் ஒற்றியூர்த் திருக்கோயி லுக்குச் செல்லுகின்றார். சங்கிலியார் செல்வதற்கு முன்ன தாகவே அவருக்குச் சூளுரைத்துத் தரும்பொருட்டு அவரது அருகையை எதிர்பார்த்திருக்கின்றார் நம்பியாரூரர். சேடிய ருடன் வரும் சங்கிலியாரருகில் சென்று தமக்கு இறைவன் அருளிச் செய்தவற்றை எடுத்துரைக்கின்றார். இதனைக் கேட்ட சங்கிலியார் பெருநாணமுற்று மது மொழி கூறமாட்டாது ஒருபுறத்தே ஒதுங்கி இருக்கோயி வினுட் செல்லுகின்றார். 'ஆசை வெட்கமறியாது’ என்பது