பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிலியார் திருமணம் 99. காதல் விஷயத்தில் ஆண்களுக்குப் பொதுவாகப் பொருந்து மாதலால், தம்பிரான் தோழர், அவரைப் பின்தொடர்ந்து 'ஆயிழையீர், இங்கு நான் உம்மைப் பிரியேன்” என்று சூளுரைத்தற் பொருட்டு, திங்கள் முடி சடையார் திருமுன் போதுவீர்' என அழைக்கின்றார். சங்கிலியாரின் கனவில் நிகழ்ந்தவற்றைக் கேட்ட சேடியர்கள், ‘எம்பெருமானே, தேவரீர் இதற்காக இமையவர்தம் பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாது’ எனச் செப்புகின்றனர். இந்நிலையில் தம்பிரான் தோழர் இறைவனது செய்கையை அறியாது, "கொம்பனையீர், யான் வேறு எவ்விடத்தில் சூளுரைத்துக் தருதல் வேண்டும்?' என்று வினவுகின்றார். சேடியர்களும் "இங்குள்ள மகிழ மரத்தடியின்கீழ் சூளுரைத்தால் போதும்' என அவர்கள் மறுமொழி பகர்கின்றனர். நம்பியாருரர் இதனைக் கேட்டு மருட்சி அடைகின்றார். சேடியர் சொல்லுவதை மறுத்தால் திருமணம் நிகழாமல் தடைபடுதல் கூடும். உடன்படுதலே தக்கது எனக் கருதி, துணிந்து 'அவ்வாறே செய்யலாம் வாருங்கள்' என்று அவர் களை இட்டுக் கொண்டு மகிழ மரத்தடிக்கு வருகின்றார். மகி மரத்தை மூன்றுமுறை வலம் வந்து சங்கிலியாரை நோக்கி இங்கு நின்னைவிட்டு அகலேன் எனச் சூளுரைத்துக் தருகின்றார். இவ்வாறு தம்பிரான் தோழர் தம்மை மனத்தம் பொருட்டுத் தெய்வத்தின் திருமுன்னர் சூளுறுதல் கண்ட சங்கிலியார், குளுறவில் வழுவினால் அவருக்கு வரும் ஏதத்தை எண்ணியவராய் தீ வினையாட்டியேன் தம்பி சான் பணியால் இச்செயலையும் காண தேர்ந்ததே' எனப் பெரிதும் மனங் கலங்கி அங்கு ஒருமருங்கு மறைந்து நிற்கின் றார். தம்பிரான் தோழரும் சூளுறவு முடிந்த பின்னர் திருச் கோயிலினுட் புகுந்து தம்பிரானைப் பணிந்து, "நாளும் 4. குலமகளுக்கு இவ்வுணர்ச்சி ஏற்படுவது சங்க இ?? பத்தின் ந்ெநி என்பது சங்க இலக்கியப் பயிற்சி யுடையார்க்கு நினைவிற்கு வாராமற் போகாது;