பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவிையாரின் ஊடல் தீர்த்தல் łł3 எடுத்துரைத்தோம். எனினும்,. அவள் இசையவில்லை’ என்கின்றார். இம்மொழியினைச் செவிமடுத்த தம்பிரான் தோழர், துணுக்குறுகின்றார். தமக்கு எளிவந்து அருளிய இறைவனை வணங்கி, 'முழுமுதல் கடவுளான நுமது மணி யினை நும் அடியவளாகிய பரவை மறுக்குந் துணிவுடைய வளோ? நீவிர் எனது அடிமைத் திறத்தை விரும்பாவிட்டால், அன்று வலியவந்து எளியேனை ஆட்கொண்டது எதற்காக? அருளாளராகிய நீர் அடியேன் படுந்துன்பத்தைக் கண்டிரங்கி என்னை அவள்பால் சேர்த்திலிராயின் என் உயிர் நீங்குவது திண்மை' என்று உரைத்துத் தளர்ந்து வீழ்கின்றார். இறைவன் அங்கு பரவையார் இல்லத்தில் ஊடலால் ஏற்படும் வெகுளியைக் காண்கின்றார்; இங்குத் தம்பிரா தோழரிடம் காதலால் படும் தளர்ச்சியைக் காண்கின்றார். தாம் உமையிடமும் கங்கையிடமும் படும் பாட்டை நினைத்துக் கொள்கின்றார்: மானிடர்க்கும் தேவர்க்கும் உணர்ச்சி பொதுவாக இருப்பது அவருக்குப் புலனாகின்றது. தம்பிரான் தோழரின் தளர்ந்த நிலையைக் கண்டு தரியாத சிவபெருமான் அவரைத் தம் அருட் கண்ணால் நோக்கி, "நாம் மீண்டும் பரவையாற் சென்று, இப்பொழுதே நீ அவளை அடையும்படிச் செய்வோம். வெம்புயர் துயர் துடைத்து நின்னை மகிழ்விப்போம்' என்கின்றார். இங்கு இறைவனைச் சேக்கிழார் பெருமான் வினையெலாம் விளைக்க வல்லார்' என்று குறிப்பிடுவது நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. - - - இதுகாறும் காதலால் உந்தப்பெற்ற தம்பிரான் தோழரின் நிலையைக் கண்டோம். இனி வெகுளியால் உந்தப்பட்ட பரவையாரின் மன்நிலை எவ்வாறு இறங்கி வரு கின்றது என்பதைக் காண்போம். பரவையார் வீட்டைவிட்டு 15. டிெ. 356, 8 صنعتين