பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 தம்பிரான் தோழர் மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந்தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார் அடியிணைத் தொழுதெழும் அன்பரார் அடியார் கொன்ன வாறறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமாறெம்பெரு மானை என்னுடம் படும் பிணி இடர்கெடுத்தானை. (1) என்பது இச்செந்தமிழ் மாலையின்முதல் மலர். இப்பதிகத்தில், என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை (1) தொடர்ந்தடுங் கடும்பிணி தொடர்வதுத் தானை (3) உற்றநோய் இற்றையே புறவொழித் தானை (5) எனவரும் திருப்பதிகத் தொடர்களால் சொன்னவாறறி வாரைப் பாராட்டி மகிழ்தலால் திருத்துருத்தியில் உடல் பிணி நீங்கப்பெற்ற நிலையில் தம்பிரான் தோழர் இச்செந் தமிழ் மாலையைப் புனைந்தருளியிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதின் புலனாகும். வலக்கண் பெறுதல் : திருத்துருத்திப் பெருமான் திரு அருளால் உடற்பிணி நீங்கி நலம் பெற்ற தம்பிரான் தோழர் அடியார்களுடன் திருத்துருத்தியினின்றும் புறப்பட்டு பல திருத்தலங்களையும் சேவித்தக் கொண்டு ஒருநாள் மாலைப் பொழுதில் சிவனடியார்களுடன் திருவாரூரை அணுகுகின் றார். அங்கு, ஆளுர்ப் பாவையுண்மண்டளி' என்னும் 25, ஆகுர்ப் பு வையுண் மண்டளி (துலா நாய்னார் கோயில்); திருஆாரூரில் கீழைரத விதியில் திருத்தேர் நிலையின் அருகிலுள்ளது. .