பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(2) 163 இதனை அடுத்து அகத்தியான் பள்ளி என்ற திருத் தலித்துக்கு வருகின்றனர் சேரவேந்தரும் சேரமான் தோழரும். இத்தலத்துப் பெருமானை வழிபட்டுக் (பதிகம் இல்லை) கோடிக்கு" வருகின்றார். சேரமான் தோழர் கோடிகுழகரை கடிதாய்க்கடற்காற்று' (132) என்று தொடங்கும் செந்தமிழ்ப் பதிகம் பாடிப் பணிகின்றார். முன்றான் கடல்நஞ்சம் உண்ட வத னாலோ பின்றான் பாவைக் குபகாரம் செய்தாயோ குன்றாப் பொழில்சூழ்தரு கோடிக் குழகா என்றான் தனியே இருந்தாய் எம்பிரானே (1) என்பது முதற் பாடல். இங்கிருந்து புறப்பட்டு பல தலங் களை வழிபட்டுக் கொண்டு பாண்டி நாட்டுக்கு வரு கின்றனர்.”* பாண்டி நாட்டுத் திருத்தலப் பயணத்தைத் தலைக் கட்டிய பிறகு சோழ நாட்டைக் குறுகி (பாம்பணிமா பர 32. அகத்தியான் பள்ளி (அகஸ்தியாம் பள்ளி): கடற் கரைத்தலம். பார்வதி தேவியாருக்கு இமயமலை யில் நடந்த திருமணத்தை அகத்தியர் இத்தலத்தி விருந்தே வழிபட்டதாக வரலாறு. - 33. கோடி (குழகர் கோயில், கோடிக்கரை). திருத் துறைப்பூண்டி - கோடித்கரை இருப்பூர்திப் பாதை யில் கோடிக்கரை நிலையத்திலிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. . 34. பாண்டி நாட்டுத் திருத்தலப் பயணம் (கட்டுரை 11) காண்க. .