பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(2) #67 கேட்க ஒலம்' என்று உரக்கக் கூறியருளுகின்றார். உடனே காவிரி நதியின் வெள்ளம் விலகி நடுவே வழிகாட்டுகின்றது. நதியின் மேற்பக்கத்தில் வெள்ளம் பளிங்கு மலையோல் விலகி நிற்கின்றது; கீழ்ப்பக்கத்து நீர் வழிந்தோடுகின்றது. மணற் பரப்பாயிருந்த நடுவழியைக் கண்டு இறைவனருளை வியந்து சேரமானும் சேரமான் தோழகம் அடியார் திருக்கூட்டத் துடன் அவ்வழியே இறங்கிச் சென்றுக் கரையேறி ஐயா றமர்ந்த பெருமானை அன்பினால் இறைஞ்சிப் போற்று கின்றனர். வழிபாடுமுடிந்த பிறகு ஆற்றின் நடுவில் அமைந்த மணல் வழியாகவே மீண்டும் தென்கரையில் ஏறுகின்றனர். இந்நிலையில் முன்விலகி நின்ற வெள்ளம் தொடர்ந்து செல்வ தாயிற்று. இங்ங்ணம் வெள்ளத் தடையை நீக்குதற்பொருட்டு நம்பியாரூரர் இச்செந்தமிழ் மாலையைப் பாடியருளினர் என்பது இப்பதிகத்தின், - கதிர்கொள் பசியை யொத்தேநான் கண்டேன் உம்மைக் காணாதேன் எதிர்த்து நீந்த மாட்டேன்.நான் - எம்மான் றம் மான் றம் மானே விதிர்த்து மேக மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறி அதிர்க்கும் திரைக்கா விரிக்கோட்டித் தையா ருடைய அடிகளோ.(9) என்ற ஒன்பதாம் திருப்பாடலால் தெளியப்படும். அதன் பின்னர் அந்த இரு பெரு அடியார்சளும் கொங்கு நாட்டைக்" கடந்து மலை நாட்டை' அடைகின்றனர். இத்துடன் சோழ நாட்டுத் திருத்தலப்பயணம் நிறைவு பெறுகின்றது. 39. பெ. பு: கழறிற்றறிவார்-135 ஐயாறப்பனின் திருச் . செவியில் இந்த ஒலம் கேட்கின்றது. உடனே அவர் தம் மைந்தன் விநாயகரை அழைத்து எதிர் ஒலம் கொடுக்குமாறு பணிக்கின்றார். ஒலம் என்றார் விநாயகர். காவிரியின் ஒட்டத்தில் தடை ஏற்பட்டு - விடுகின்றது (இது புராண வரலாறு) - 40. கொங்கு நாட்டுத் திருத்தலப் பணயம் காண்க, 4. மலைநாட்டுத் திருத்தலப்பதுணம் காண்க: