பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#70 தம்பிரான் தோழர் வணப்பு . அழகு.: ஆருயிர்களைச் சிறப்பாகிய சிவத்துடன் கூட்டிப் பேரின்பம் உறச்செய்யும் பேரருள். யாப்பு - பிணிப்புடையது. புல்லுமலம் என்னும் ஆனவ அழுக்கு உயிர்களுடன் செம்பினிற் களிம்புபோல் தொன் மையே ஒட்டியுள்ளது. அப்பிணிப்பினை நீக்குவிக்க ஆண்டவன் நோய்க்கு மருந்துபோல இருவினையினையும், மருந்துக்கலம் போல் உடம்பினையும், மருந்துக் கூட்டுப் போல் ஊணினையும், மருத்து இல்லம் போல உலகினையும் கூட்டி யாப்புறுத்தினன். யாப்பு-கட்டு. தடப்பு நடத்துதல்; உயிர்களை மேற்கூறிய மலம், மாயை, கன்மங்களுடன் குழந்தைகளைக் கைப்பிடித்து நடத்துவது போன்று நடத்துதல், இதனையே ஆட்டுவித்தல்' என்பர். இத்திருவருள் ஆதி என்றும் சொல்லப்படும். ஆதி எனினும் அம்மை எனினும் ஒன்றே, இவ்வாதி தொழில் ஆற்ற லாகும். - மறைப்பு - பண்டே புல்விய தொன்மை மலம் பல ஆற்றல்களையுடையது. அம்மல ஆற்றல் ஒவ்வோர் உயிரை யும் பல்வேறு வகையாகப் பற்றியுள்ளது. அஃது இறைவனைக் காணவொட்டாது மறைக்கும் தன்மையது. ஐந்தெழுத்தே ஆண்டவன் வடிவம் : அருவம், அரு உருவம், உருவம் என்னும் மூவகைப் பிழம்பினையும் கடந்த நிலையே விழுமிய முழுமுதல்வன் நிலையாகும். அருவம் கட்புலம் ஆகா உருவம், சிவன், சக்தி, நாதம், விந்து என்ற நான்கும் அருவத்திருமேனிகள். சதாசிவன் அருஉருவத் திருமேனி. மகேசுவரன், உருத்திரன், மால், அயன் நான்கும் உருவத் திருமேனிகள். உருவம், கண்ணுக்குப் புலனாவது, அதாவது, நம்மனோர் கண்ணுக்குப் புலனாகாவிடினும் தவத்தோர் கண்ணுக்குப் புலனாவது. மொழிக்கு மொழி தித்திக்கும் மூவர் தமிழின்கண், காணப்படும் திரு ஐந்தெழுத்தின் திருப்பதிகங்கள் நான்கு