பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொன்கு காட்டுத் திருத்தலப் பயணம் 17, அவை முறையே ஆளுடைய பிள்ளையார் (சம்பந்தர் அருளியது இரண்டு'ஆளுடைய அரசர் அருளியது ஒன்று"; ஆளுடைய நம்பி அருளியது ஒன்று". இதன் பெருமையை நினைந்த காழிப் பிள்ளையார் ஜம்மையினும் துணை அஞ்செழுத்துமே (3.22:6) என்றும், வேதநான்கினும் மெய்ப் பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே (3.49) என்றும் கூறினார், தாவினுக்க ருங்கலம் 'நமச்சிவாயவே" (4.11:2) என்றார் ஆளுடைய அரசர் நான்மறக்கினும் சொல்லு தா நமச்சிவாயவே" என்று ஆளுடைய நம்பி சுட்டியதை மேலே காட்டினேன். - கொடு முடியை விட்டு நீங்கி காஞ்சிவாய்ப் பேசூக்த்' திருக்கோயிலுக்கு வருகின்றார். இத்தலத்துப் பெருமானை பேரூருறைவாய் பட்டிப் பெருமான்" (7.47:4), பேரூரென உறைவான் (7.82:10) பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம் பலத்தே பெற்றாமன்றே (7,90:10) என்று பேசுவர் தம்பிரான் தோழர். பேரூர்ப் பெருமானை வழிபடும் போது, தில்லை மன்றுள் நின்றாடும் தமது திருக்கோலத்தோடு காட்சி கொடுத்தருளுகின்றார். தில்லையம்பலவன் திருக் கூத்தினைக் கண்டு கும்பிடப் பெற்றால் இனிப் புறம் போங் 2. சம்பத், தேவா. 3.22; 3.49 3. திருதாவு தேவா 4.11 4. சுந்த, தேவா 7.48 . 5 பேரூர் கோவைக்கு 3 கல்தொலைவிலுள்ளது. இது வைப்புத்தலம், அதாவது தனக்கெனத் தனித்திருப் பதிகத்தைப் பெறாமல் பிற தலப் பதிகங்களிலும் பொதுத் தலப்பதிகங்களிலும் பெயரளவில் குறித்துப் போற்றப் பெற்றதலம். இது காஞ்சிவாய்ப் பேரூர், குடகத்தில்லையம்பலம் (மேலைச் சிதம்பரம்) , என்றும் பெயர்களைப் பெறும். இதனருகேயுள்ள் காஞ்சியாறு இன்று நொய்யலாறு என வழங்குகிறது. முன் ஆன்பட்டி' என்றதும் இது.