பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களால் அறிபவை 207 தெஞ்சம் நெக்குருகிப் பாடியுள்ளார். பொன் வேண்டியிருந் தாலும் பெண் வேண்டிருந்தாலும் இறைவனை உரிமை யாகக் கேட்டுப்பெறும் பேறு பெற்றவர் இவர் என்பதை அறி கின்றோம். புகலுர்ப் பெருமானிடம் பொன் பெற்ற செய்தி யைக் கண்டோம். இவ்வாறே பழமலை நாதரிடமும் பொன் பெறுகின்றார். பணத்தை வங்கியின் கிளையொன்றில் செலுத்தி அதே வங்கியின் பிறிதொரு கிளையில் பெறுவதை போலவே, முதுகுன்றத்திறைவனிடம் பெற்ற பொன்னை மணிமுத்தாற்றில் போட்டு திருவாரூர்த் திருக்குளத்தில் பெறுகின்றார். . இங்ங்னமே சங்கப் பாடல்களில் வரும் தலைவன் தோழனைக் கொண்டு காரியம் சாதித்துக் கொள்ளல் போலவே, இவரும் இறைவனை வேண்டி இருபெண்களை மனைவியாகப் பெறுகின்றார். இறைவனும் இவர் செய்யும் துரிசுகளுக்கெல்லாம் உடனாகின்றார்: மாழையொண்கண் பரவையைத் தந் தாண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. (7.51:10) என்று இறைவன் தனக்கு உதவியதை உளங்கனிந்து போற்று கின்றார். திருவாரூர் இறைவனை வேண்டிப் பரவையாரைப் பெற்றதுபோல், ஒற்றியூர் இறைவனை வேண்டி சங்கிலி யாரைப் பெறுகின்றார். மான்றிகழும் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம் தோன்றவருள் செந்தளித்தாம். (7,89:10) என்று போற்றுகின்றார். இரு பெண்களிடமும் ஐம்புலவின் பங்களை ஆரத் துய்க்கும் சிற்றின்ப நிலையிலும் சிவபெரு