பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களால் அறிபவை 213 எதிர்கொள் பாடிப் பதிகப் பாடல் ஒன்றில் தோற்ற முண்டேல் மரணம் உண்டு {7.7:2) என்பதால் பிறப்பும் இறப்பும் வட்டம்போல் சுழன்று வருவதை விளக்குவார். இதே பதிகம் எட்டாம் பாடலில் இன்பமுண்டேல் துன்ப முண்டு என்பதால் வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்து வரும் இயல்புடையது என்று காட்டுவார். திருவாரூர் பதிகப் பாடலொன்றில், - ‘மணமென மகிழ்வர் முன்னே с» в з 35 м у в з ***8●、 喻母翠莎令*总编岛 பிணமெனச் சுடுவர் பேர்த்தே (7.8:6) என்பதால் இந்த உயிர்தாங்கிய உடலுக்கு மணம் புரியுங் கால் மக்கள் தாய் தந்தை சுற்றம் மகிழ்ச்சியடைவர் என்றும், உயிர் உடலை விட்டு நீங்கும்போது அதைப் பின மென்று கருதி நெருப்பிலிடுவர் என்ற கருத்தை விளக்கி, "ஆதலால் பிறவி வேண்டேன்' என்பார். திருக்கேதாரப் பதிகத்தின் முதற் பாடலில் (7.78;1) "வாழ்வாவது மாயம்; இது மண்ணாவது திண்ணம்’ என்ப தால் நிலையாமையை உணர்த்தித் தாழாது அறஞ்செய்யு மாறு பணிக்கின்றார். மற்றொரு திருவாரூர்ப் பதிகத்தின் (7.5) ஒன்பதாம் பாடலில் "பேயோடேனும் பிறிவு ஒன்று இன்னாது என்பர் பிறர்'; ஆனால் நாய்போல் திரிந்து உமக்கு ஆட்பட்டோர் உம்மை வந்தடைந்தால் நீர் வாய் - திறக்க மாட்டீர்' என்று ஆரூர்ப் பெருமானை நோக்கிக் கூறுவார். இங்ஙனம் எத்தனையோ செய்திகளையும் தம்பிரான் தோழர் வாழ்வில் நிகழ்ந்த பல வரலாற்றுக் குறிப்புகளையும் இவர் அருளியுள்ள திருப்பதிகங்களை ஓதி உணர்வதால் அறியலாம்; சிவாதுபவத்தையும் பெற்று மகிழலாம்,