பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. தேவாரத் திருத்தலங்கள் தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது-(குறள்-7) என்பது பொய்யாமொழி. இதனை நன்குணர்ந்த தமிழ்ப் பெருமக்கள் திருக்கோயில்களை ஊர்தோறும் நிறுவிப் போற்றுகின்றனர். இது தமிழ்ப் பண்பாடு என்று சொல் லினும் அது மிகையன்று. புதிய குடியிருப்பு தோன்றும் இடங் அளிலெல்லாம் ஏதாவது ஒரு சிறு கோயிலையாவது எழுப் புதல் வழக்கமாக இருந்து வருகின்றது. சில ஆண்டுகட்கு முன்னர்த் தில்லி மாநகரில் வாழும் தமிழ்மக்கள் முருகன் கோயில் எடுத்தனர். அமெரிக்காவில் திருவேங்கடவன் திருக்கோயில் எழுப்பப் பெற்றிருப்பதை நாம் அறிவோம். இவையெல்லாம் 'கடவுள் உண்டு என்னும் கருத்தை வலி புறுத்துவதாக அமைகின்றன. இக்கருத்து தெளிவு பெற்ற தொன்மைகாலத் தொட்டே தமிழகத்தில் திருக்கோயில்கள் பல தோன்றி நிலை பெற்றுள்ளன. இன்றைய தமிழகத்தில் எல்லாச் சமயத்தார்கட்குமே கோயில்கள் உள்ளன. தேசமுமை அறிவதற்கு முன்னோ பின்னோ திருவாருர்க் கோயிலாக் கொண்டே நாளே (6,34:10) என வரும் அப்பர் பெருமானின் திருவாரூர்த் திருத்தாண் டகத் தொடர் திருவாரூர், தில்லை, சீகாழி முதலிய தமிழகத் திருக்கோயில்களின் தொன்மையை உணர்த்துகின்றது.