பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருத்தலங்கள் 215 பண்டைக்காலத்தில் ஊர்தோறும் அமைந்த பொது. இல்’ எனப்படும் அம்பலத்திலே நடப்பெற்றிருந்த தெய்வம் உறையும் தறியாகிய கந்து என்பதே தேவார ஆசிரியர் காலத்தில் சிவபெருமானது அருவுருவத் திருமேனியை வழி படுவதற்குரிய பெரிய திருக்கோயில்களாக வளர்ந்து திகழ்வதாயிற்து. பட்டினப் பாலை குறிக்கும் கந்து எனப் படும் தெய்வம் உறையும் தறியும் சைவர்கள் வழிபடும் அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத் திருவுருவமும் ஒன் றெனக் கருதி வழிபட்ட வழக்கம், .

  • .w.u*="rm-war***బr:

கோதன்மையால் தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. (6.61:1) என வரும் அப்பர் திருவாக்கால் உணரப்படும். கன்றுக்குட்டியைக் கட்டி வைக்கும் தறியிலிருந்து இறைவன்.வழிபாடு ஏற்றனன் என்பது வரலாறு. - - கோயிலின் இன்றியமையாமை : உலக மக்கள் பசியும் பிணியும் பகையும் நீங்கி நல்வாழ்வு பெற்று உய்வதற்கு ஊர் தோறும் அமைந்த திருக்கோயில் வழிபாட்டு முறையே பெருந்துணை புரிகின்றது. திருவருள் நிலையமாகிய இத் தகைய திருக்கோயிலைப் பெறாத ஊர்கள் நீர்வளம் நிலவளம் செல்வப் பெருக்கு ஆகிய இவற்றால் எவ்வுணவு சிறப்புற்றிருந்தாலும், அங்கு வாழும் மக்கள் உள்ளத்தில் அன்பும் அருளுமாகிய நற்பண்புகளை வளர்க்கும் சிறப் ఓ . 1. பட்டினப் பாலை-அடி (246.49). இத்தறியை நீராடித் தூய்மையுடைய மகளிர் பலரும் அம்பலத்தை மெழுகித் தூய்மை செய்து அந்தியில் நந்தா விளக்கேற்றி இறைவனை வழிபட்டனர். மக்கள் பலரும் அவ்வம்பலத்திலே நறுமலர் துளவி இறைவனை வழிபட்டுப் போற்றினர், ஊருக்குப் புதியராயினார் அவ்வம்பலத்தில் தங்கியும் இருந் தனர். + w .