பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருத்தலங்கள் 2217 தென்னவனா யுலகாண்ட செங்கணார்க் கடியேன் (7.39:11) என்று போற்றி நிலையான புகழுக்கு இடம் தந்துள்ளார். சோழநாட்டில் அம்பர், நன்னிலம், வைகல் முதலிய தலங் களில் காணப்படும் மாடக் கோயில்கள் கோச்செங்கட் சோழி நாயனார் கட்டியவையே. இவன் 70 கோயில்கள் நிறுவிய செய்தியை, - இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ரீசற்கு எழில்மாடம் எழுபதுசெய்(து) உலகம் ஆண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. (பெரி. திரு. 6.6:8) என்ற திருநறையூர்ப் பதிகத்தில் திருமங்கை மன்னன் தெளி வாகக் குறிப்பிட்டிருத்தல் காணலாம். இவன் கட்டிய கோயில்கள் இவனுக்கு முன்பு:கட்டப்பெற்ற திருக்கோயில் களை விட அளவில் பெரியனவாக இருந்தமையால் பெருங் கோயில் என்ற பெயராலும் வழங்கப்பெற்றன. நன்னி லத்துப் பெருங்கோயில் (7.98) என்று நம்பியாரூர் போற்று தலால், மாடக்கோயில் பெருங்கோயில்’ என்ற பெயரஈலும் வழங்கப்பெறும் என்பது நன்கு புலனாகின்றது. நாவுக்கரசர் தமிழகமெங்கும் சென்று சமய எழுச்சி உண்டு பண்ணிய காலத்தில் தமிழகத்தில் மாடிக்கோயில்" அமைப்புடைய பெருங் கோயில்கள் 78 இருந்தன ன்ன்பது வரலாறு. இப்பெருங் கோயில்களேயன்றிேேவறு வகைக் கோயில்களும் இருந்தனவாக அறியக்கிடக்கின்றன. நாவுக் :கரசர் பெருமான் திருப்பாடலொன்றால் கரக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக் கோயில், ஆலக் கோயில் என வழங்கும் திருக்கோயில்களும் ஆங்காங்கே நிறுவப் பெற்று வழிபடப்பெற்றன என்பதை அறிய முடிகின்றது.