பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 8 தம்பிரான் தோழர் பெருக்காறு சடைக்கணித்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில் திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே. (6.71:5) என்பது அப்பெருமானது திருத்தாண்டகம். இவண் குறிப் பிடப் பெற்ற 78 பெருங்கோயில்களுள் 70 பெருங் கோயில்கள் கோட்செங்கட் சோழன் நிறுவியவை. எஞ்சிய எட்டும் சோழனுக்குப் பின்வந்த தமிழ் மன்னர்களால் எழுப்பப் பெற் தவை. சங்க காலத் திவிருந்து இக்கோயில்கள் சுடுமண்ணும் (செங்கல்) சாந்துக்தொண்டு அமைக்கப்பெற்று வந்தன. சோழருக்குப்பின் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்ட மகேந் திரவர்மன், நரசிங்கவர்மன், இராசசிம்மன் முதலிய பல்லவ மன்னர்கள் மலைகளைக் குடைந்தும் பாறைகளைப் பிளந்து அடுக்கியும் கற்கோயில்களை எழுப்பினர். - • கோச்செங்கணானுக்கு முன்னும் பின்னும் ஆட்சி புரிந்த முடிமன்னர்களாலும் குறுநில மன்னர்களாலும் சிறியனவும் பெரியனவுமான எத்தனையோ திருக்கோயில்கள் அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும். தேவார ஆசிரியர்கள் காலத்திற்கு (கி.பி ஏழாம் நூற்றாண்டு) முன்னரே தமிழகத்தில் நிலை பெற்றிருந்த பழங்கோயில்களையும், பிற்காலத்தில் களப்பிரர் படையெடுப்பாலும் சமணம், பெளத்தம் முதலிய சமயங் களைத் தழுவினோரால் சிதைக்கப் பெற்றுப் பின்னர் காழிப் பின்ளையார், நாவுக்கரசர் காலத்தில் சிதைவு நீங்கி மீண்டும் பழைய திலை எய்திய திருக்கோயில்களையும் (எ-டு பழை