பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவர்ாக் திருத்தலங்கள் 219 யாறை வடதளி); தேவார ஆசிரியர்கள் பாடிப் போற்றி யுள்ளனர்." மேலும் அவர்கள் காலத்தில் எழுந்த சிராப் பள்ளி, மயேந்திரப் பள்ளி, குணதர வீச்சரம் முதலியன போன்று புதியனவாக எழுப்பப்பெற்ற சிலகோயில்களும் அவர் களது திருப்பதிகங்கள் பெற்றுள்ளன. திருக்கோயில்களின் அமைப்பு: மூவர் முதலிகள் காலத்துக் கோயில்கள் பலவகைப் பட்டிருந்தன. மாடக்கோயில்கள் யானைகள் புகாவண்ணம் உயரமாக அமைக்கப்பெற்றி ருந்தன. சக்கரக் கோயில்கள் என்பன குதிரைப் பூட்டிய தேர்போன்று சக்கரங்களுடன் அமைந்திருந்தன." ஞாழல் (புலிநகக் கொன்றை, கொகுடி (முல்லை) முதலிய தாவரங் இளின் சார்பினால் அமைந்த கோயில்களும், 5ಮೆನಿ a০ কোঁ முதலியவற்றால் அழகுறப் புனைந்த மணிக்கோயில்களும், துரய செம்பொன்னினால் எழுதி லேய்ந்த தில்லைச் சிற்ஜம் பலம் திருவாலங்காடு முதலாகக் கூத்தப்பெருமான் திரு நடம் புரியும் அம்பலங்களும், வானத்திலிருந்து இறங்கும் விமானத்தின் அமைப்பினையொத்து அமைந்த வீழி மிழலை விண்ணிழி விமானம் போன்ற கோயில்களும் அக்காலத்தில் இருந்தன. கோயில் திருப்பணி நடைபெறுங் கால் அத்திருப் பணி நிறைவுபெறும் வரையிலும் இறைவனுடைய நாள் வழி பாடும் திருவிழாக்களும் தவறாமல் நடைபெறும்பொருட்டு இடைக்காலத்தில் அமைத்துக் கொண்ட இளங்கோயில்களும் (பாலாலயம்) இருந்தன. இவற்றின் அமைப்பு பழைய கோயிலின் அமைப்பை யொட்டியே இருக்கும். எ.டு. மீயச் சூர் இளங்கோயில், கடம்பூர் இளங்கோயில் இவையும் பாடல் பெற்றுள்ளள. . 3. கும்பகோணம்-சார்ங்கபாணி ேகா யி வி ன் அமைப்பு இவ்வாறு உள்ளது. இதைக் கண்ட திருமங்கையாழ்வார் இரதபந்த அமைப்பில் திருஎழு கூற்றிருக்கை என்ற சித்திர வியால் தலத்துப் பெரு மானைப் போற்றியுள்ளமை ஈண்டுக் கருதத் தக்கது.